Cinema History
ஜெண்டில்மேனில் நான் நடிக்க வேண்டியது..! ஆனா சங்கர் சொன்னத நான் செய்யல! – சரத்குமார் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் சிறப்பாக நடித்து வருபவர் சரத்குமார். 1980களில் தயாரிப்பாளராக அறிமுகமான சரத்குமார் கண் சிமிட்டும் நேரம், சட்டத்தின் மறுபக்கம் உள்ளிட்ட படங்களில் சில கேரக்டர் ரோல்களில் நடித்தார்.
1990 களில் தொடங்கி தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1992 இல் வெளியான சூரியன் திரைப்படம் சரத்குமார் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சூரியன் படத்தை பவித்ரன் இயக்கி இருந்தார். இந்த பவித்ரன் உடன் பணியாற்றியவர் தான் இயக்குனர் ஷங்கர்.
அப்போதே ஷங்கரின் ஆளுமையை புரிந்து கொண்ட சரத்குமார் தயாரிப்பாளர் குஞ்சுமோனிடம் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்துக்காக பரிந்துரை செய்துள்ளார். இப்படியாக ஜென்டில்மேன் படம் ஆரம்பித்த அதே சமயம் பவித்ரனின் ’ஐ லவ் இந்தியா’ படமும் படப்பிடிப்பில் இருந்தது.
அப்போது ஜென்டில்மேன்ல் வரும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஷங்கர் சரத்குமாரை அணுகியுள்ளார். ஆனால் கதைப்படி அந்த கதாபாத்திரம் மீசையை எடுக்கவேண்டும். ஆனால் அந்த நேரம் சரத்குமார் பவித்ரன் இயக்கத்தில் ஐ லவ் இந்தியா படத்திலும் நடிக்க வேண்டியிருந்தது. அந்த படத்தில் சரத்குமார் கண்டிப்பாக மீசையுடன் இருக்க வேண்டும்.
இதனால் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்று யோசித்த சரத்குமார் ’சூரியன்’ மூலம் தனக்கு திருப்புமுனை அளித்த பவித்ரனின் படத்திலேயே நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார். அதன் பின்னர் ஜென்டில்மேன்ல் வரும் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஷங்கர் நடிகர் சரணை நடிக்க வைத்தார். 1993ல் ஜெண்டில்மேன், ஐ லவ் இந்தியா இரண்டு படங்களுமே வெளியாகி வெற்றி பெற்றன.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்