Cinema History
இறப்பதற்கு முன்பு எம்.ஜி.ஆர் பார்த்த கடைசி படம்.. மனம் நொந்த சத்யராஜ்..!
சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் முதலமைச்சரானார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான்.
இதனாலேயே தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக மதிப்பு உண்டு முக்கியமாக எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார்.
அதனாலேயே இப்பொழுதும் சினிமா துறையில் பெரிதாக மதிக்கப்படும் ஒரு நபராக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார். நடிகர் சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய ரசிகர் ஆவார் சினிமாவிற்கு வந்த காலம் முதலே எம்.ஜி.ஆர் மீது அதிக அன்பு கொண்டிருந்தார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் பார்த்த படம்:
தொடர்ந்து சத்யராஜின் திரைப்படங்களில் அவர் எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதும் எம்.ஜிஆ.ர் போல் நடிப்பதையும் அதிகமாக பார்க்க முடியும். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் தன்னை பாராட்டியது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சத்யராஜ்.
அதில் அவர் கூறும் பொழுது வேதம் புதிது திரைப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதனை அப்பொழுது எம்.ஜி.ஆர் நேரில் வந்து பார்த்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு எனது கைகளை பிடித்து முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நான் இந்த படத்தை வெளியிட வைக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அந்த படம் பார்த்த 10 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். வேதம் புதிதான் அவர் பார்த்த கடைசி திரைப்படம் என்று அந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் சத்யராஜ்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்