Cinema History
பொய்யெல்லாம் சொல்ல விரும்பலை.. அஜித், விஜய்க்கிட்ட என்னால முடியலை.. உண்மையை கூறிய சத்யராஜ்.!
தமிழ் சினிமாவில் சரத்குமார், விஜயகாந்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் பெரிய நடிகர்களாக இருந்தப்போது அவர்களுக்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். அப்போதைய சமயங்களில் சத்யராஜ் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்து வந்தன.
அதனாலேயே சத்யராஜின் மார்க்கெட்டும் அதிகரித்து இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர் சத்யராஜ். காமெடியன், வில்லன் என்று அவர் தொடாத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம்.
அப்படி இருந்த சத்யராஜ்க்கு 2000களுக்கு பிறகு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. இங்க்லிஷ் காரன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரிதாக மார்க்கெட்டை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து சத்யராஜ் தற்சமயம் அதுக்குறித்து பேசியுள்ளார்.
அதில் கூறிய சத்யராஜ், எனக்கு ஹீரோவாக வாய்ப்புகள் குறைய காரணமே எனக்கு மார்க்கெட் இல்லாமல் போனதுதான். நான் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கவில்லை. அஜித், விஜய், சிம்பு, தனுஷ் மாதிரியான நடிகர்கள் வந்த பிறகு அவர்களுக்கு ஈடு கொடுத்து என்னால் நடிக்க முடியவில்லை.
மேலும் கதாநாயகனாக நடிப்பதை விடவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிப்பதற்கு நல்ல தொகை சம்பளமாக கிடைத்தது. அதனால்தான் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினேன் என கூறியுள்ளார் சத்யராஜ்.
