Connect with us

தீபாவளி இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பிரபல நடிகரின் மகன் மரணம்..!

accident

News

தீபாவளி இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பிரபல நடிகரின் மகன் மரணம்..!

Social Media Bar

பெரும்பாலும் தீபாவளி என்றால் ஒரு பக்கம் பண்டிகையும் கொண்டாட்டங்களும் இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் தொடர்ந்து ஏதாவது குற்றங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெரும்பாலும் தீபாவளி அன்று அதிக மது அருந்திவிட்டு பிரச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம் என்றால் வெடி விபத்துக்கள் என்பது இன்னொரு பக்கம் இருக்கும்.

இதனால்தான் தீபாவளி சமயங்களில் தொடர்ந்து போலீஸார்களும் மற்ற தீயணைப்பு துறைகளும் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவது உண்டு இப்படியாக தீபாவளி ஒரு பக்கம் பிரச்சனையை கொடுத்து வருகிறது.

அப்படியாக தற்சமயம் ஒரு பிரபல நடிகரின் மகனுக்கு அது ஒரு பிரச்சனை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுறம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகரான கார்த்திக் இவர் சின்ன திரையில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகர் மகன்

அதன் மூலம் கொஞ்சம் பிரபலமானவர். இந்த நிலையில் இவரது மகன் நேற்று தீபாவளியை முன்னிட்டு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து காரில் பயணித்திருக்கிறார். அப்பொழுது வெளியில் சென்று விட்டு திரும்ப வரும் பொழுது வேளச்சேரி பகுதியில் வேகமாக அவர் வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அவருடைய கார் மோதியதில் பெரும் விபத்துக்கு உள்ளானது.

இதனை அடுத்து சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர் ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இது ஒரு அதிர்ச்சி சம்பவமாக அமைந்திருக்கிறது.

To Top