News
அன்னிக்கு எங்கிட்ட அப்படி நடந்துக்குவார்னு எதிர்பார்க்கல.. கமல் குறித்து ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஸ்ருதி…
ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். முதன் முதலாக ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஸ்ருதி.
அந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஸ்ருதிக்கு அடுத்து பெரும் ஹிட்டாக அமைந்த திரைப்படம் 3. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த படத்தில் தனுஷுடன் நிறைய நெருக்கமான காட்சிகள் அவருக்கு இருந்தது.
இந்த நிலையில் அந்த படம் அதிக சர்ச்சைக்குள்ளானது. அப்போது தனுஷிற்கும் ஸ்ருதிக்கும் இடையே உறவு இருப்பதாகவும் ஒரு பக்கம் கிசுகிசுக்கள் இருந்து வந்தன.

தமிழில் எண்ட்ரி:
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று தமிழின் முக்கிய நடிகையானார் ஸ்ருதி ஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கமலுக்கும் அவருக்கும் இருந்த சிறுவயது அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

அதில் அவரிடம் கமல் எப்போதாவது உங்களை திட்டியதுண்டா. அல்லது அடித்ததுண்டா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன் இல்லை என்னை அப்பா அதிகமாக திட்டியது கிடையாது. எங்கள் வீட்டில் அக்ஷராதான் ரொம்பவும் சுட்டி.
கமல் செய்த வேலை:
அதனால் அவளைதான் அப்பா திட்டிக்கொண்டிருப்பார். என்னை எப்போவாவதுதான் திட்டுவார். நான் ஒழுங்காக படிக்கவே மாட்டேன். எப்போதும் படிப்பது போல நடித்து கொண்டிருப்பேன். இந்த நிலையில் ஒரு நாள் ரேங்க் கார்டு வந்தது.
அதில் ஒரு பாடத்தில் நான் தோல்வியுற்றேன். அதை பார்த்த என் அப்பா ரிப்போர்ட் கார்டை என் முகத்தில் வீசினார். அப்பா அப்படி நடந்துக்கொள்வார் என நான் நினைக்கவே இல்லை. அதற்கு பிறகுதான் நான் படிப்பில் கவனம் செலுத்தினேன் என கூறுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
