Connect with us

நடிகை கூட நெருக்கமா நடிக்கணும்!.. அந்த சாப்பாட்டை தவிர்த்த சிவாஜி…

News

நடிகை கூட நெருக்கமா நடிக்கணும்!.. அந்த சாப்பாட்டை தவிர்த்த சிவாஜி…

Social Media Bar

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் கூட எப்போதுமே நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இந்தியா சினிமாவிலேயே கிடையாது என கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு பல விதமான நடிப்புகளை சிறப்பாக நடிக்க கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் போல குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்காமல் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தார்.

அதையும் தாண்டி சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர் சிவாஜி கணேசன். ஒரு முறை பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது மதிய உணவை உண்பதற்காக சிவாஜி கணேசன் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு உணவில் தயிர் பச்சடி வைக்கப்பட்டது.

அதை பார்த்ததும் எனக்கு தயிர் பச்சடி வேண்டாம் எடுங்கள் என கூறிவிட்டார் சிவாஜி. ஏன் சார் தயிர் பிடிக்காதா? என பக்கத்தில் இருந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி பதில் எதுவும் அளிக்கவில்லை.

மதிய இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பு நடந்தது. அதில் சவுக்கார் ஜானகி இறப்பது போலவும் அவரை நெருக்கமாக பிடித்துக்கொண்டு சிவாஜி பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சி முடிந்த பிறகு உதவியாளரை அழைத்த சிவாஜி இதனால்தான் தயிர் பச்சடி வேண்டாம் என்றேன்.

தயிர் பச்சடியை சாப்பிட்டுவிட்டு இந்த காட்சியில் நடித்திருந்தால் அந்த பெண்ணால் என்னுடன் நடிக்க முடிந்திருக்காது என விளக்கம் கூறியுள்ளார் சிவாஜி. அந்த அளவிற்கு நடிப்பு குறித்து மிகவும் தெளிவுடன் செயல்ப்பட்டார் சிவாஜி கணேசன்.

To Top