Bigg Boss Tamil
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.கே வை அழைத்த விஜய் டிவி!.. கமலை விட அதிக சம்பளம் கேட்ட எஸ்.கே!..
பொதுவாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 8 இல் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பதே பெரிதாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது.
பிரபல சமூக வலைதள பிரபலங்களான அமலா சாஜி டி.டி.எஃப் வாசன் போன்ற பலர் இந்த முறை பிக் பாஸில் கலந்து கொள்ள போவதாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கிய காலம் முதலே அதை தொகுத்து வழங்கி வந்தவர் கமல்ஹாசன்தான். இன்னும் சிலர் கமல்ஹாசன்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்று நினைத்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு கமல் பிக்பாஸில் முக்கியமான ஆளாக இருந்து வருகிறார் ஆனால் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருப்பதாலும் அரசியல் தொடர்பான வேலைகள் இருப்பதாலும் பிக் பாஸில் இருந்து விலகி இருக்கிறார் கமல்ஹாசன்.

அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பதுதான் இப்பொழுது பேச்சாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே நடிகர் சிம்புவிடம் இவர்கள் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.கேவுக்கு வாய்ப்பு:
ஆனால் நடிகர் சிம்புவும் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் இப்பொழுதுதான் சிம்பு இந்த மாதிரியான விமர்சனங்கள் எல்லாம் இல்லாமல் இருந்து வருகிறார்.
எனவே அவர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் விஜய் டிவியின் மூலமாக பிரபலம் அடைந்து திரையில் இப்பொழுது பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயனிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் சிவகார்த்திகேயன் இப்பொழுதும் விஜய் டிவியில் நடக்கும் விழாக்களுக்கு எல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் இதற்கு 190 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பெரிய தொகையை விஜய் டிவியால் சம்பளமாக கொடுக்க முடியுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் இன்னும் அதிகமாக இது பிரபலம் அடையும் என்பதால் இது குறித்து பேசி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
