News
உடல்நலமில்லாமல் கிடக்கும் தயாரிப்பாளரை கண்டுக்காத சிவகார்த்திகேயன்!.. தொடர்ந்து சர்ச்சைதான்!.
Sivakarthikeyan : வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக சிவகார்த்திகேயன் இருந்தாலும் கூட தொடர்ந்து அவர் மீது அவதூறுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.
இதற்கு அவர் வாரிசு நடிகராக இல்லாமல் வெளியில் இருந்து வந்ததுதான் காரணம் என்று சிலர் கூறினாலும் அப்படி வந்த விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்களுக்கு அந்த பிரச்சனை எதுவும் இல்லை எனவே சர்ச்சைகளை சிவகார்த்திகேயன் தேடி போய் மாட்டிக் கொள்கிறாரோ என்று பேச்சுக்களும் இருக்கின்றன.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த பொழுது தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உள்ள சர்ச்சை பெரிதாக பேசப்பட்டது தற்சமயம் அயலான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக கூட சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் இடையிலான பிரச்சனை குறித்து அதிக பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தன.

இந்த நிலையில் மற்றும் ஒரு சர்ச்சை தற்சமயம் உருவாகி இருக்கிறது அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜெ.ராஜேஷ் தற்சமயம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்சமயம் அயலான் திரைப்படம் வெளியாவதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கூறலாம். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போது வரை அவரை நேரில் சென்று பார்க்கவில்லை நலம் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அயலான் திரைப்படம் சரியாக போகாததுதான் இதற்கு காரணமாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத பட்சத்தில் அயலான் இரண்டாம் பாகம் எப்படி வரும் என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.
