News
ஏ.ஆர் முருகதாஸ் படக்கதை இதுதான்.. தெரியாமல் வாயை விட்டு கதையை லீக் செய்த சிவகார்த்திகேயன்!..
தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் காமெடியாக நடித்தால் மட்டும் தான் தன்னுடைய திரைப்படம் வெற்றிபெறும் என்று நினைத்து வந்தார் சிவகார்த்திகேயன்.
அந்த விஷயத்தை மாற்றி அமைத்தது டாக்டர் திரைப்படம். டாக்டர் திரைப்படம் காமெடியான திரைப்படம் என்றாலும் கூட அதில் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பான ஒரு கதாபாத்திரமாகும்.
ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அந்த படத்தை ஹிட் அளித்து கொடுத்தார்கள். அதனை தொடர்ந்து காமெடி கதாநாயகன் என்பதிலிருந்து மாறி கொஞ்சம் சீரியசான கதாநாயகனாக மாறத் தொடங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கதையை லீக் செய்த எஸ்.கே
அந்த வகையில்தான் தற்சமயம் அமரன் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். அமரன் திரைப்படம் நகைச்சுவையே இல்லாத முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்கிறார் ஆனால் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படமும் ராணுவம் தொடர்பான திரைப்படம் தான் என்பதை தற்சமயம் ஒரு நேர்காணலில் சிவகார்த்திகேயனே கூறியிருக்கிறார்.
அமரன் திரைப்படத்திற்காக நிஜமான துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதன் மூலம் துப்பாக்கிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டார். இதுக்குறித்து அவர் கூறும் பொழுது அடுத்து நான் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் கர்னல் வேஷம் போடுபவர்கள் துப்பாக்கிகளை தவறாக பிடிக்கும்போது நான் அவர்களிடம் சென்று கர்னல் என்றால் துப்பாக்கியை இப்படித்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறேன் அந்த அளவிற்கு இந்த விஷயங்கள் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படமும் ஒரு ராணுவம் தொடர்பான திரைப்படம்தான் என தெரிந்திருக்கிறது.
