Tamil Cinema News
சினிமால என்ன மாதிரி ஆட்களுக்கு இடம் இல்ல.. வெளிப்படையாக கூறிய எஸ்.கே… நடந்தது என்ன?
சினிமாவை பொறுத்தவரை ஒரு சாதாரண மனிதனின் வெற்றி என்பது அனைவருக்குமே நெருக்கமான விஷயமாக இருக்கும். உதாரணத்திற்கு பஸ் கண்டக்ட்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனதால்தான் ரஜினிகாந்த் அனைவருக்கும் நெருக்கமானவராக இருக்கிறார்.
ஒருவேளை அவர் பணக்கார வீட்டு பையனாக இருந்திருந்தால் மக்கள் இவ்வளவு கொண்டாடி இருப்பார்களா? என தெரியவில்லை. அதே போல திருச்சியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது சினிமாவில் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து தன்னுடைய உழைப்பின் மூலம் போராடி சினிமாவில் இந்த நிலையை அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களால் கூட இப்போது சிவகார்த்திகேயன் இருக்கும் இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இதுக்குறித்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறும்போது சினிமாவில் நான் நன்றாக வளர்ந்து வருவது ஒரு சிலருக்கு பிடிக்கிறது என்றாலும் நிறைய பேருக்கு அது பிடிப்பதில்லை. தொடர்ந்து என்னை தோல்வியடைய செய்யவே அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு வெற்றி பெற்று நான் நிரூபிக்க தேவையில்லை. ஏனெனில் நான் பெறும் வெற்றி எனக்கானது அல்ல. அந்த வெற்றிக்காக போராடிய படக்குழுவுக்கானது.
அதே போல சமூக வலைத்தளங்களிலுமே கூட என்னை பற்றி பேசுவதை பார்த்திருக்கிறேன். என்னுடைய படம் தோல்வியடைந்துவிட்டால் அதற்கு நான் தான் காரணம் என கூறுவார்கள். அதுவே அந்த படம் வெற்றி பெற்றுவிட்டால் என்னை தவிர மற்ற எல்லோரையும் பாராட்டுவார்கள் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.