Tamil Cinema News
எனக்கு நடந்த முதல் காதல் தோல்வி.. முதல் முறையாக ஓப்பன் டாக் கொடுத்த் சிவாங்கி.!
சின்னத்திரையில் அதிக பிரபலமாகி அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சிவாங்கி. சிவாங்கி விஜய் டிவியில் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார். அதில் அவரது குரலுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
அதற்கு பிறகு தொடர்ந்து சிவாங்கிக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். குக் வித் கோமாளியில் 4 சீசன்களிலுமே முக்கியமான கோமாளியாக சிவாங்கி இருந்து வந்தார்.
இவர் கோமாளியாக இருந்து வந்த சமயத்தில் அஸ்வின் என்பவரை இவர் காதலித்ததாக பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் அதற்கு பிறகு எஸ்.கே நடித்த டான், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும் சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார் சிவாங்கி. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும்போது உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா? என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவாங்கி ஆமாம் எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது. அது மிகவும் வலியை ஏற்படுத்தும். ஆனால் அந்த வலிதான் உங்கள் மனதுக்கு இன்னமும் ஆற்றலை கொடுக்கும், இந்த காதல் தோல்விக்கு பிறகுதான் என்னை நானே மேம்படுத்தி கொள்ள துவங்கினேன் என கூறியுள்ளார் சிவாங்கி.
