Cinema History
புது இசையமைப்பாளராக இருந்தாலும் அந்த விஷயத்தில் எஸ்.பி.பி ஸ்ட்ரிக்ட்டு… எஸ்.பி.பி போட்ட ரூல்ஸ்!..
SP balacupramaniyam : தமிழில் உள்ள பிரபலமான பாடலாசிரியர்களில் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். என்னதான் மிகப்பெரும் பாடலாசிரியராக இருந்தாலும் கூட மிகவும் எளிமையான ஒரு மனிதர் எஸ்.பி பாலசுப்ரமணியம் என்று வேட்பாளரும் கூறுவது உண்டு.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் உள்ள மற்ற நடிகர்களுடன் இயல்பாக பழகக் கூடியவர் பாலசுப்பிரமணியம். ஒரு முறை ஒரு ஆரம்ப கட்ட இசையமைப்பாளருக்கு பாடல் பாடுவதற்காக எஸ்பிபி ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார்.
அப்பொழுது அங்கு இசையமைப்பாளர் பாடலை பாட எஸ்பிபி அழைத்த பொழுது அவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்க கூடாது ஏனெனில் அவர் நம்மை விட மூத்தவர் அவர் என்ன பாடல் பாடுகிறாரோ அதை ஏற்றுக் கொள்வோம் என்கிற மன ரீதியில் இருந்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பொதுவாகவே முதல் படம் என்பது இசையமைப்பாளர்களுக்கு கொஞ்சம் பயத்தை உண்டாக்கும் என்பதால் அவர் அந்த மாதிரியான ஒரு முடிவை எடுத்திருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த எஸ்பிபி பாடலை பாடுவதற்கு முன்பு சார் என்று இசையமைப்பாளரை அழைத்தார் அந்த இசையமைப்பாளருக்கு ஒரே அதிர்ச்சி ஆரம்ப நிலை இசையமைப்பாளரான நம்மை சார் என்று அழைக்கிறாரே எஸ்பிபி என்று ஆச்சரியத்துடன் அவர் அருகில் சென்று இருக்கிறார் இசையமைப்பாளர்.
அப்பொழுது எஸ்பிபி கூறும் பொழுது தமிழில் மற்ற இசையமைப்பாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு என்ன மாதிரியான பாடல்கள் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும் எனவே அதற்கு தகுந்தார் போல நான் பாடல்களை பாடி தந்து விடுவேன்.
ஆனால் உங்களுக்கு எப்படிப்பட்ட பாடல் பிடிக்கும் என்பது எனக்கு தெரியாதே எனவே நான் பாடுகிறேன் உங்களுக்கு எப்பொழுது அது சரியாக வருவதாக தோன்றுதோ அப்பொழுது ஓகே சொல்லுங்கள் மற்றபடி நான் ஒரு சீனியர் பாடகர் என்பதால் எனது பாடலை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நேரடியாக கூறி இருக்கிறார் எஸ்பிபி அந்த அளவிற்கு தொழிலுக்கு மரியாதை கொடுத்த நபராக எஸ்பிபி இருந்துள்ளார்.
