Cinema History
எஸ். பி முத்துராமனின் அப்பா பற்றி தெரியுமா? இராம சுப்பையா பற்றி யாரும் அறியாத தகவல்கள்.!
சினிமாவில் ரஜினி கமல் என பல முக்கிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கிய பிரபலமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி முத்துராமன். இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவரது தந்தை எவ்வளவு பெரிய ஆள் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
புதுக்கோட்டை சமஸ்தானமாக மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தப்போது 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழனியப்ப செட்டியார் மற்றும் சிட்டாள் ஆச்சி என்போருக்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் சுப்பையா. அப்போதெல்லாம் பள்ளிகள் பெரிதாக அமைக்கப்படவில்லை.
எனவே திண்ணை பள்ளிக்கூடங்கள்தான் அப்போது அதிகமாக இருந்தன. அதில்தான் பயின்று வந்தார். அந்த காலக்க்கட்டத்தில் தமிழ் கணக்கு இரண்டு பாடங்கள் மட்டும்தான் சுப்பையாவின் சாதியை சேர்ந்தவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.
தொழிலை கற்றுக்கொண்ட சுப்பையா:
அதை மட்டும் கற்றுக்கொண்ட சுப்பையா 10 வயதுக்கு பிறகு வட்டி தொழில் பழகுவதற்காக அவரது உறவினர் வீட்டிற்கு பர்மாவிற்கு சென்றார். அங்கு வட்டி தொழிலை நன்றாக பழகினார். ஆரம்பத்தில் அவருக்கு சம்பளம் என எதுவும் வழங்கப்படவில்லை.
மாறாக வட்டி தொழில் நன்றாக சொல்லி தரப்பட்டது. மூன்று வேளை உணவும் தங்கும் இடமும் தரப்பட்டது. அதனை தொடர்ந்து பவுண்டே என்கிற இன்னொரு வட்டி கடையில் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் சுப்பையா. அதற்கு பிறகு அந்த நபரின் நம்பிக்கையை சம்பாதித்த நிலையில் வட்டி தொழிலை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சுப்பையாவின் கைக்கு வந்தது.
ஆனால் அந்த தொழில் அவருக்கு பிடிக்கவில்லை. தாய்லாந்து தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத தேசமாகும். அதனால் விவசாயம் கொழித்து வந்தது. விவசாயத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கும் விவசாயிகள் அறுவடை முடிந்ததும் சரியாக பணத்தை அடைத்தனர்.
புதிய கொள்கையில் ஆர்வம்:
ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களிடம் நிறைய பணம் வட்டியாக வசூல் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த சுப்பையா இந்த தொழிலை விட்டு விலகினார். சாதாரண குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளை பணக்கார வீடுகளுக்கு தத்து கொடுப்பது என்பது செட்டியார்கள் மத்தியில் அப்போது பரவலாக இருந்து வந்த பழக்கமாக இருந்தது.
அதனை தொடர்ந்து சுப்பையா 1926 இல் வேறு வீட்டிற்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்கள் சுப்பையாவின் பெயரை முத்துராமன் என மாற்றினர். இந்த நிலையில் 1928 ஆம் ஆண்டு சுப்பையாவுக்கும் விசாலாட்சி என்பவருக்கும் திருமணம் ஆனது.
அதற்கு பிறகு சுப்பையா மற்றும் விசாலாட்சி இருவருமே பெரியாரிய கொள்கைகள் மீது ஈர்ப்பில் ஈடுப்பட்டு அதற்காக போராடியும் வந்தனர். இந்த நிலையில் திராவிட போராளிகள் தங்கி போவதற்கான இடமாக தனது இடத்தை மாற்றினார் சுப்பையா.
மேலும் தன் வீட்டுக்கு சமதர்ம விலாஸ் என பெயரிட்டார். அந்த இல்லத்தில் தி.க வை சேர்ந்த பலர் தங்கி சென்றுள்ளனர். கலைஞர், எம்.ஜி.ஆர், பாரதிதாசன், அண்ணா என பலருக்கும் அந்த இடம் வேடந்தாங்கலாக இருந்தது.
இந்த நிலையில் கல்லக்குடி போராட்டத்தில் கலைஞரோடு சேர்ந்து சுப்பையாவும் சிறைக்கு சென்றார். அதன் பிறகு கலைஞர் முதல்வர் ஆன பிறகு சுப்பையாவை தமிழக மேலவை உறுப்பினராக்கினார். இப்படிப்பட்ட சுப்பையாவுக்கு பிறந்தவர்தான் இயக்குனர் எஸ்.பி முத்துராமன்.
