Connect with us

அஜித் சாரோட கமிட்மெண்ட் இருக்கு சாரி!.. விஜய் படத்துக்கு நோ சொன்ன ஸ்ரீ லீலா!..

vijay sree leela

News

அஜித் சாரோட கமிட்மெண்ட் இருக்கு சாரி!.. விஜய் படத்துக்கு நோ சொன்ன ஸ்ரீ லீலா!..

Social Media Bar

தெலுங்கில் ஏற்கனவே இருக்கும் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுத்துக்கொண்டு எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. பெண் பிரபு தேவா என கூறும் அளவிற்கு உடலை வளைத்து நெழித்து எந்த ஒரு கடினமான நடனத்தையும் எளிதாக ஆடி விடுகிறார் ஸ்ரீ லீலா.

அவருடன் ஆடும் நடிகர்களுக்கே அவருக்கு இணையாக நடனமாடுவது கடினமான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ லீலாவின் மார்க்கெட்டை பெரிதாக்கி விட்ட திரைப்படமாக குண்டூர் காரம் திரைப்படம் இருக்கிறது.

அதற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் அவருக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருந்துள்ளது. தற்சமயம் அந்த பாடலில் த்ரிஷா நடித்துள்ளார். குண்டூர் காரம் படத்தின் டான்ஸ் மாஸ்டர்தான் இதிலும் பணிப்புரிந்துள்ளார்.

த்ரிஷாவிற்கு முன்பு அந்த படத்தில் ஸ்ரீ லீலாவைதான் ஆட வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில்தான் அடுத்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லியில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீ லீலாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து விஜய் படத்தில் ஒரு பாடலுக்கு வருவதை விடவும் அஜித் படத்தில் கதாநாயகியாக நடிப்பது நன்றாக இருக்குமே என யோசித்துள்ளார் ஸ்ரீ லீலா.

இதனால் அவர் விஜய் பாடலில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

To Top