Connect with us

மேலாளர் செய்த சம்பவத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் ஸ்ரீகாந்த்… கடுப்பான பெரிய இயக்குனர்..!

Cinema History

மேலாளர் செய்த சம்பவத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் ஸ்ரீகாந்த்… கடுப்பான பெரிய இயக்குனர்..!

Social Media Bar

சாக்லேட் பாய் நடிகர்களாக தமிழ் சினிமாவிற்கு வந்து தொடர்ந்து வரவேற்பு பெற்று நடித்தும் கூட பெரிய நடிகர்களாக மாறாத சில பிரபலங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அவர்களின் முதல் படத்தில் அவர்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைக்கும்.

ஆனால் போகப்போக அவர்கள் அந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளாத காரணத்தினால் வாய்ப்பை இழந்து விடுவார்கள் தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், அப்பாஸ், ஷாம் மாதிரியான நடிகர்களெல்லாம் இப்படித்தான் சினிமாவிற்கு வந்த பொழுது நல்ல வரவேற்பு பெற்று பிறகு போகப்போக நல்ல கதை களங்களை தேர்ந்தெடுக்காத காரணத்தினால் வாய்ப்பை இழந்தனர்.

சினிமா அறிமுகம்:

அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கியமான நடிகர். ஸ்ரீகாந்த் சினிமாவில் இருந்த பொழுது அவர் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக காதல் கதைகளில் ஸ்ரீகாந்த் சிறப்பான நடிகராக இருந்து வந்தார்.

பார்த்திபன் கனவு, ரோஜா கூட்டம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அவரது நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. மக்களும் அவரது ரசிகராக மாறி இருந்தனர். ஆனால் ஆக்ஷன் திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடிக்க துவங்கிய பொழுது அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.

மேலாளர் செய்த வேலை:

இந்த நிலையில் தன்னுடைய மேலாளால் ஒரு பெரிய பட வாய்ப்பு இழந்த கதையை ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது நடிகர் சுந்தர் சி ஒரு காதல் கதையை திரைப்படமாகலாம் என்று முடிவெடுத்தார்.

 

அப்பொழுது நான் பிரபல நடிகராக இருந்தேன் எனவே என்னை வைத்து  படம் பண்ணலாம் என்று அவர் காத்திருந்தார். அப்பொழுது அவர் கதையை சொல்ல நினைத்தபொழுது என்னுடைய மேலாளர் ஒருவர் எனது சொந்தக்காரர் தான் எனக்கு மேலாளராக இருந்தார். அவர் என்னிடம் கதையை கூறிவிட்டு தான் ஸ்ரீகாந்திடம் கூற வேண்டும் என்று கூறினார்.

இதனால் கடுப்பான சுந்தர்சி என்னை வைத்து பணமே பண்ண வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் மிக தாமதமாக தான் இந்த விஷயம் எனக்கு தெரிந்தது. என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

To Top