Tech News
இலங்கையில் Starlink எலான் மஸ்க் போட்ட விலை.. இவ்வளவு கொடுத்து யார் வாங்குவாங்க..!
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இணையத்தை உலகம் முழுக்க வழங்குவதற்காக உருவாக்கிய நிறுவனம் Starlink. இன்னும் சில மாதங்களில் Starlink இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
முன்னதாகவே இலங்கையில் இணையவசதிக்கான அனுமதியை பெற்ற Starlink தற்சமயம் அங்கு இணைய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றின் விலை எல்லாம் இங்கே ஏற்கனவே இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் மாதிரியான நிறுவனங்களின் ப்ளான்களை விட அதிகமாக தெரிகிறது.
அந்த வகையில் இலங்கையில் வீட்டில் கனெக்ஷன் எடுப்போருக்கு மாதம் 2625 மற்றும் 4280 ரூபாய் ஆகிய விலைகளில் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் இண்டர்நெட் சேவைகளை விடவும் இது விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் எந்த அளவிற்கு ஸ்டார்லிங்கிற்கு வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை.
