News
படுக்கையில் அதிகம் அதை விரும்பும் தம்பதிகள்.. இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்.!
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதுமே இறப்புகளின் விகிதம் என்பது கணிசமாக குறைய துவங்கியது.
இதனால் பல நாடுகளில் மக்கள் தொகை சில ஆண்டுகளிலேயே அதிகரித்தது. அப்படியாக இந்தியாவிலும் அதிகரித்தது. உறவுகளுக்கு இடையே அதிக விதிமுறைகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் என்னதான் பலரும் தாம்பத்திய உறவில் இருந்தாலும் அவர்களுக்கு தங்கள் இணையுடன் சேர்ந்து உறங்குவதில் விருப்பம் இல்லையாம்.
சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் 78 சதவீதம் மக்கள் தனிமையில் உறங்கவே விருப்பப்படுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வுகளின்படி தென் கொரியாவில் 65 சதவீத மக்களும், சீனாவில் 67 சதவீத மக்களும், இந்தியாவில் 78 சதவீத மக்களும் ,அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 50 சதவீத மக்களும் தனிமையில் உறங்குவதை விரும்புகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகே இந்த விகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படி தனிமையில் உறங்குவதற்கு குறட்டை போன்ற பல்வேறு விஷயங்களும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் இது கணவன் மனைவிக்கு இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.
