News
சன் டிவில இருந்து எனக்கு போன் பண்ணுனாங்க.. கன்ஃபார்ம் செய்த வேலராம மூர்த்தி…
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். இந்த தொடரின் முக்கியமான ஆணி வேர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துதான்.
நடிகர் மாரிமுத்து அவருக்கு வழங்கிய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். அதனையடுத்து அவருக்கு அதிக வரவேற்பும் ரசிக கூட்டமும் வர தொடங்கியது.
ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் நடிகர் மாரிமுத்து. இந்நிலையில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரனுக்கு பதிலாக அதில் யார் நடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது.
நடிகர் வேல ராம மூர்த்தி அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. இதுக்குறித்து வேல ராம மூர்த்தி ஒரு பேட்டியில் கூறும்போது அது உண்மைதான் சன் டிவி எனக்கு போன் செய்தார்கள். எதிர் நீச்சல் சீரியலில் நடிக்குமாறு கூறினர்.
ஆனால் எனக்கு ஏற்கனவே ஒரு மாதத்திற்கு கால் ஷூட்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நான் நடித்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளேன். ஆனால் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என வேல ராம மூர்த்தி கூறியுள்ளார்.
எனவே அவர் வரும்வரை இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தை வேறு வகையில் கதையை கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
