News
46 வயதிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டி இருக்கு!.. சீரியல் நடிகை பிரவீனாவுக்கு வந்த சோதனை..!
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. மலையாளத்தில் இளமை காலங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் பிரவீனா. 1992 லேயே மலையாளத்தில் கௌரி என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார் பிரவீனா.
அந்த திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்தார் பிரவீனா.
நடிகை பிரவீனா:
வெகு தாமதமாக 2016 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி ஆனார் பிரவீனா. 2016 இல் வெளிவந்த வெற்றிவேல் திரைப்படத்தில் இவருக்கு கதாபாத்திரம் கிடைத்தது.

தொடர்ந்து தன்னுடைய 46 ஆவது வயதிலும் வாய்ப்பை பெற்று வரும் இவர் இறுதியாக ஜோ திரைப்படத்தில் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருந்தார். இது இல்லாமல் தமிழ் சீரியல்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார் பிரவீனா.
தமிழில் வாய்ப்பு:
தமிழில் ராஜா ராணி, பிரியமானவள், இனியா போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது “பிரவீனா ஒரு மலையாள நடிகை என்றாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள திரைப்படங்களை பொறுத்தவரை அதில் இயற்கையாக ரியாக்ஷன்களை கொடுத்தாலே போதும். ஆனால் தமிழ் சீரியல்களில் அப்படி இல்லை. அதில் கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். இருந்தாலும் அதற்கு தகுந்தாற் போல அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் நடிக்க வேண்டி உள்ளது என்று ப்ரவீனா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
