Tamil Cinema News
பெரும் நடிகராக இருந்தப்போதும் சரத்குமார் எனக்கு காட்டிய கருணை!.. மனம் உருகிய சுந்தர் சி..
Actor Sarathkumar : தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கிய முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அப்போது மிக பிரபலமானவை.
ஆனால் இவர் வெறும் காமெடி படங்கள் மட்டுமே எடுக்கவில்லை. தொடர்ந்து சில கமர்ஷியல் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். கமலை வைத்து அன்பே சிவம், ரஜினியை வைத்து அருணாச்சலம் என இரு ஹிட் படங்களை அவர் கொடுத்துள்ளார்.
தற்சமயம் பேய் பட இயக்குனராக மாறியுள்ளார் சுந்தர் சி. அரண்மனை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தொடர்ந்து அரண்மனை திரைப்படத்தின் அடுத்த பாகங்களை எல்லாம் எடுத்து வருகிறார்.

சுந்தர் சி ஆரம்பக்காலக்கட்டங்களில் சினிமாவில் முயற்சி செய்து வந்த காலக்கட்டத்திலேயே அவருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் சரத்குமார். இதுக்குறித்து சுந்தர் சி ஒரு விழாவில் கூறியுள்ளார். அதாவது சரத்குமார் நடிக்கும் ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் சுந்தர் சி.
அப்போதே அவரது வேலை செய்யும் விதத்தை பார்த்த சரத்குமார், நீங்கள் கண்டிப்பாக ஒரு இயக்குனராக வருவீர்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு சில படங்கள் இயக்கி சுந்தர் சி யும் ஒரு அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வர துவங்கினார்.
இந்த நிலையில் நாட்டாமை திரைப்படம் மூலமாக பெரும் ஹிட் கொடுத்திருந்தார் சரத்குமார். அவரிடம் சென்ற சுந்தர் சி தயக்கத்துடனேயே தனது படத்தில் நடிக்க முடியுமா என கேட்டுள்ளார். உடனே சரத்குமார், படத்தின் கதை என்ன?, கதாநாயகி யார் என எதையுமே கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அப்படி உருவான திரைப்படம்தான் ஜானகிராமன் என்கிற திரைப்படம். இதுக்குறித்து சுந்தர் சி கூறும்போது ஆரம்பம் முதலே எனக்கு நம்பிக்கை கொடுத்த சரத்குமார் எனக்கு செய்த உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
