நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் அதிக பிரபலமாகி வருகிறது.
சூர்யா ஆர்யா குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். ஆர்யாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல காலங்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தவர் ஆர்யா.
பிறகு அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகர்கள் போல தன்னுடைய மனைவியை திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று வீட்டிற்குள் அடைத்து வைக்காமல் தொடர்ந்து தனது மனைவி நடிப்பதற்கு துணையாக நின்றார் ஆர்யா.
கஷ்டப்பட்ட சூர்யா:
அதனை தொடர்ந்து சாயிஷா இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதில் ஹைலைட்டாக ஆர்யாவே நடித்த காப்பான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாயிஷா.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சூர்யா அவர் பேட்டியில் கூறும் பொழுது அந்த படத்தில் எனக்கு சங்கடமாக இருந்த விஷயங்கள் எல்லாம் ஆர்யாவிற்கு கொடுக்க வேண்டிய டயலாக்குகளை எனக்கு கொடுத்திருந்தனர்.
நானும் சாய்ஷாவும் காதலிப்பது போன்ற காட்சிகள் இருந்தது அந்த காட்சிகளை ஆர்யா முன்னாடியே நடிப்பது கஷ்டமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் சூர்யா.







