Tag Archives: நெல்சன்

கார்ப்பரெட் கம்பெனிக்கு சப்போர்ட் செய்யும் நெல்சன்.. செய்யம்மாட்டாரா பின்ன?

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக நெல்சன் இருந்து வருகிறார். இப்போது இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே அதிக பிரபலமடைந்து விடுகின்றனர்.

அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் ஆவார். அவர் இயக்கிய டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

இயக்குனர் நெல்சன்:

nelson

தொடர்ந்து மிக சீக்கிரத்திலேயே நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். அப்படியாக அவர் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து இனிமேல் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை மட்டும் தான் நெல்சன் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்சன் இனிமேல் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் படங்களாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நெல்சன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அவர் அதிகமாக செலவு செய்யக்கூடியவர் சின்ன சின்ன நிறுவனங்களால் அந்த செலவுகளை ஈடு கட்ட முடியாது என்பதால் நெல்சன் அப்படியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 ல இதுதான் ரூல்ஸ்.. சன் பிக்சர்ஸ்க்கு குண்டை தூக்கி போட்ட நெல்சன்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சமீபத்தில் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது.

ஜெய்லர் திரைப்படம் வெற்றியாகும் என்பது இந்த பட குழுவே எதிர்பார்த்த ஒரு விஷயம் கிடையாது என்று தான் கூற வேண்டும். படம் வெளியான பிறகு இப்படியான ஒரு வெற்றியை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான திட்டம் போடப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூலி படத்திற்கு பிறகு துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்சனின் திட்டம்:

jailer 2

இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தையே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் அதிகமாக படமாக்கினார். லோகேஷ் கனகராஜ் போல சீக்கிரத்தில் திரைப்படங்களை எடுக்கக் கூடியவர் அல்ல நெல்சன்.

இதனால் தற்சமயம் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு விதிமுறையை போட்டுள்ளார். அதாவது 11 மாதங்கள் படப்பிடிப்புக்காக கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார். ஆனால் 2026 பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்து விடலாம் என்பது சன் பிக்சர்ஸின் எண்ணமாக இருந்தது.

ஆனால் நெல்சன் கேட்டுக் கொண்ட காரணத்தினால் தற்சமயம் அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.கே தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள்கிட்ட இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா? பட வெற்றிக்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் ப்ளான்..!

தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்சமயம் 100 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் நடிகராக மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கும் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் பழங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது.

அதே சமயம் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கொடுத்த வெற்றி படங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருக்கிறது அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்சமயம் இதற்காக சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர். பெரும்பாலும் இப்பொழுது சிவக்கார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாம் அறிமுக இயக்குனர்களாலேயே இயக்கப்படுகிறது.

அதிக அனுபவம் வாய்ந்த இயக்குனர்களிடம் படம் நடிக்கும் அதே சமயம் புது இயக்குனர்கள் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அப்படியாக அவர் நடித்த திரைப்படங்கள் தான் இப்பொழுது அவருக்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்திருக்கின்றன.

பின்னால் உள்ள ரகசியம்:

அந்த வரிசையில் பார்க்கும் பொழுது முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி ரூபாய் ஹிட் கொடுத்தது டாக்டர் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 25 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

இதன் இயக்குனரான நெல்சன் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா என்கிற திரைப்படத்தை இயக்கினார். அவரது இரண்டாவது திரைப்படம் டாக்டர் அதேபோல டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு டான் தான் முதல் திரைப்படம்.

அந்த திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இப்பொழுது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

எனவே தொடர்ந்து சிவக்கார்த்திகேயன் புது இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இது தான் சிவகார்த்திகேயனின் வெற்றியின் ரகசியம் என்றும் கூறப்படுகிறது.

என்னதான் நட்புனாலும் அந்த விஷயத்தில் கவின்…! ஷாக்கான நெல்சன்…

தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராக கவின் இருந்து வருகிறார். இதனாலேயே நடிகர் கவினுக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து அவர்களுக்கு மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும்.

நிறைய நடிகர்கள் தவறான கதை களங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக சினிமாவில் வரவேற்பை இழப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு நடிகர்கள் விமல் களவாணி திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பை பெற்றார்.

கவின் சம்பளம்:

பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காததால் மார்க்கெட்டை இழந்தார் விமல். இந்த நிலையில் தற்சமயம் கவின் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பிளடி பெக்கர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இருக்கிறார்.

kavin

நெல்சனும் கவினும் நீண்ட நாள் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் பிளடி பெக்கர் திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள் என்று கவினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நெல்சன் கூறும் பொழுது இப்பொழுது வரை கவின் படத்திற்கான சம்பளத்தை வாங்கவே இல்லை.

பட சம்பளத்தில் ஒரு 10 சதவீதம்தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி படம் ஓடுவதை வைத்துதான் நான் அவருக்கு சம்பளமே கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் நெல்சன். நட்பின் காரணமாக மற்ற நடிகர்கள் கூட செய்யாத விஷயத்தை கவின் நெல்சனுக்காக செய்திருக்கிறார் என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

விஜய் சேதுபதி படத்தில் ஏமாற்றம்… கவினுக்கு நடந்த நிகழ்வு.. ஓப்பன் டாக் கொடுத்த கவின்.!

kavin

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.

கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு இப்பொழுது நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து கவின் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பிளடி பெக்கர்.

கவினுக்கு நடந்த சம்பவம்:

இந்த திரைப்படமும் தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரம்ப காலங்களில் சினிமாவிற்கு வரும்பொழுது நடிகர் கவின் அனுபவித்த விஷயங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

அதில் அவர் கூறும் பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரே ஒரு காட்சியில் வருவது போலதான் எனக்கு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

நானும் சரி என்று அங்கு சென்றேன். ஆனால் படப்பிடிப்புக்கான எந்த ஒரு அறிகுறியும் அங்கு தெரியவில்லை. கார்த்திக் சுப்புராஜ் கையில் ஒரு சின்ன கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு நின்று இருந்தார்.

ஏதோ தேவையில்லாத படத்தில் வந்து சிக்கிக் கொண்டோம் என்றுதான் நான் நினைத்தேன். ஏனெனில் அப்போதைய சமயங்களில் நிறைய திரைப்படங்களுக்கு என்னை அழைத்து இருந்தனர்.. அப்படித்தான் இந்த படமும் ஒன்று என்று நினைத்தேன்.

ஆனால் திரையில் படம் வெளியான பொழுது தான் அந்த படம் எப்படியான படம் என்பதை எனக்கு புரிந்தது என்று கூறியிருக்கிறார் கவின்.

காசு விஷயத்தில் வந்த பிரச்சனை.. விஜய் டிவிக்கு ஆப்பு வைத்த இயக்குனர் நெல்சன்.. தரமா ப்ளான் போட்டுருக்காரு..

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வெற்றி இயக்குனராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். முதன்முதலாக கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.

கோலமாவு கோகிலா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற படத்தை இயக்கினார். அது இன்னும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக நெல்சனுக்கு பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

விஜய் டிவிக்கு வைத்த ஆப்பு:

இந்த நிலையில் அடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் நெல்சன். இதற்கு நடுவே இவரது தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் ப்ளடி பக்கர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

அடிப்படையில் நெல்சன் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்தான் எனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவிக்கு விற்பதற்கு நினைத்தார். ஆனால் விஜய் டிவி இந்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய்தான் தர முடியும் என்று கூறிவிட்டது.

ஆனால் இவர் இன்னும் அதிகமான தொகைக்கு இதை விற்கலாம் என்று நினைத்து இருந்தால் எனவே விஜய் டிவியை கைவிட்டுவிட்டு தற்சமயம் சன் டிவி நிறுவனத்தினம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. எனவே இவர் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமைத்தை கொடுக்கிறார் என்று தெரிந்ததுமே கலாநிதி மாறனே மூன்று கோடி ரூபாய்க்கு அதை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டாராம்.

இதனை அடுத்து தற்சமயம் சன் டிவியில் அந்த படத்தை விற்க முடிவு செய்திருக்கிறார் நெல்சன்

தளபதி 69 ல மம்முட்டி ஷாருக்கை இறக்குவேன்!.. வைரலான நெல்சனின் டாக்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கு நடுவே இனி திரைப்படங்களே நடிக்க போவதில்லை. முழுவதுமாக அரசியலில் பயணிக்கப்போவதாக விஜய் கூறியுள்ளார்.

கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம் மட்டும் நடிப்பார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.

thalapathy-vijay1

ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படமாகதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் வரிசையில் ஆர்.ஜே பாலாஜி, வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் என பலர் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நெல்சனிடம் ஒருவேளை தளபதி 69 ஐ நீங்கள் இயக்குவதாக இருந்தால் யாரை எல்லாம அதில் நடிக்க வைப்பீர்கள் என கேட்டப்போது அதில் விஜய்யுடன் மம்முட்டி, ஷாருக்கான் போன்ற நடிகர்களை நடிக்க வைப்பேன்.

கதாநாயகியாக நயன்தாரா மற்றும் ஆலியா பட் ஆகியோரை நடிக்க வைப்பேன் என கூறியுள்ளார் நெல்சன். இதனை தொடர்ந்து நெல்சனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பான காம்போ கிடைக்குமே என இதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

ஹிந்தி நடிகரை வளைத்துப்போட்ட தமிழ் இயக்குனர்கள்… அப்படி என்னதான் இருக்கு இவங்ககிட்ட?…

Ranbir,Nelson & Lokesh:இந்திய திரையுலகில் தமிழ் திரைக்களத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் போட்டிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ஹிந்தி, மற்றும் இதர மொழி படங்களில் அந்தந்த மொழி பேசும் நடிகர்களுக்குத்தான் மௌசு அதிகம் காரணம் என் நடிகனை தான் நான் பாராட்டுவேன் அதாவது என் மண்ணை நான் தான் ஆள வேண்டும் என்பது போல.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தமிழில் நடிப்பவர் தமிழ் நடிகன் மட்டுமல்ல மற்ற மொழி பேசும் நடிகர்களும் தமிழ் மொழி படத்தில், தமிழ் மொழி இயக்குனருடன் பணியாற்ற முடிந்தது.

அதே போல் தமிழ் நடிகர்களும் மற்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்தது. மொழி சினிமா புகழ் பேசியவர்கள் எல்லாரும் இப்போது இந்திய சினிமா என்றும் எந்த மொழியில் படம் எடுத்து வென்றாலும் அது இந்திய சினிமா என்று தான் போற்றப்பட வேண்டும் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவான படங்களை தமிழ் மக்களும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் மொழி படங்களை மற்ற மொழி மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதன் அடுத்தகட்டமாக அண்டை மாநில மொழி பேசும் நடிகர்கள் தமிழ் மொழி படம் நடித்தது தாண்டி இப்போது ஹிந்தி பேசும் பாலிவுட் நடிகர்களுக்கும் தமிழ் சினிமா மீதும் தமிழ் சினிமா இயக்குனர்கள் மீதும் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. அதன் விளைவுதான் ஜவான்.

தமிழ் மொழி பேசத்தெரியாத ஹிந்தி நடிகர் சாருக்கானை தமிழ் இயக்குனர் இயக்கி அந்த படம் தற்போது மாபெரும் ஹிட் கொடுத்து வசூலை குவித்துள்ளது.

பாலிவுட் நடிகர்களை கவர்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல ஆனால் இன்று எல்லா ஹிந்தி நடிகர்களையும் கவர்ந்து இழுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உருவாகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று சென்னையில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள  “அனிமல்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரன்பீர் கபூரை கவர்ந்த மூன்று படங்களில் தற்போது வெளிவந்த லியோ மட்டுமல்லாமல் விக்ரம் மற்றும் ஜெயிலர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குனர்கள் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் அவர்களின் கதை உருவாக்கம் பற்றியும் மேடையில் புகழ்ந்து பேசியிருக்கிறார். இதிலிருந்து அடுத்து ஹிந்தி நடிகரை இயக்க தமிழ் இயக்குனர்கள் தயாராக உள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது.

சிவாஜி கணேசன் படத்தோட காபிதான் அந்த ரஜினி படம்!.. ஓப்பன் டாக் கொடுத்த ரமேஷ் கண்ணா!..

Rajinikanth : ரஜினிகாந்த் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மெஹா ஹிட் படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதே நிலையில் அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரஜினிகாந்த்.

அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே இருவரும் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கினர். ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறும்போது ஜெயிலர் படம் தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட சிவாஜி நடித்த தங்கபதக்கம் படத்தின் காபிதான். தங்கபதக்கம் போலவே இதிலும் தனது மகன் பாதை தவறியதால் தந்தையே அவரை கொல்கிறார். ஆனால் உணர்வு ரீதியாக தங்கபதக்கம் திரைப்படத்தில் இருந்த கனெக்ட் இந்த படத்தில் இல்லை.

படம் முழுக்க ரஜினிகாந்த் பலரையும் கொன்று கொண்டே இருந்தார். அப்படியே தனது மகனையும் கொன்றுவிட்டார் என்று கூறியிருந்தார் ரமேஷ் கண்ணா.

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

லோகேஷ் கனகராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமாகவே பெரும் உயரத்தை தொட்ட இயக்குனராக நெல்சன் இருக்கிறார். கோலமாவு கோகிலா திரைப்படத்திலேயே ஓரளவு அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் அதற்குப் பிறகு அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் நெல்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் அதற்கடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் நெல்சன். படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே ஜெயிலர் திரைப்படம் குறித்து அதிக நம்பிக்கையில் இருந்தார் ரஜினிகாந்த்.

மேலும் நெல்சனுக்கும் ரஜினிக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருந்தது ஏனெனில் அதற்கு முன்பு இருவருமே தோல்வி படங்களை கொடுத்திருந்தனர். இந்த நிலையில் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.

இயக்குனர் ஆவதற்கு முன்பு விஜய் டிவியில் பணிபுரிந்தார் நெல்சன் பொதுவாகவே விஜய் டிவியில் பணிபுரிபவர்களுக்கு சன் டிவியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே இது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது விஜய் டிவியில் நீங்கள் வேலை பார்த்ததை சன் பிக்சர்ஸிடம் கூறினீர்களா ?என்று வேடிக்கையாக கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த நெல்சன் இல்லை அவர்கள் வாய்ப்பு கொடுக்கும் வரை நான் கூறவே இல்லை படப்பிடிப்பு துவங்கிய பிறகு தான் நான் விஜய் டிவியில் வேலை பார்த்த விஷயத்தை கூறினேன். அதுவரை அந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்தேன். என்று கூறியுள்ளார் நெல்சன்.

ஜெயிலர் கதைய முதல்ல லோகேஷ்கிட்ட சொன்னேன்! அப்புறம்தான் விக்ரம் வந்துச்சு! – நெல்சன் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் ஹிட் குடுத்து பட்டையை கிளப்பி வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் நெல்சன் உள்ளார். விஜய் நடிப்பில் இவர் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், இவர் இயக்கி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் அந்த வெற்றியையும் அவர் கொண்டாட முடியாதபடி இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் கதை கமல்ஹாசன் நடித்து முன்னதாக வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாயலில் இருப்பதாகவும், விக்ரமையே பட்டி டிங்கரிங் செய்து நெல்சன் படம் எடுத்துள்ளதாகவும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவலை நெல்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். பீஸ்ட் படத்திற்கான வேலைகள் தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும்போதே நெல்சன் அடுத்த படத்தில் ரஜினியை இயக்குகிறார் என முடிவாகிவிட்டது.

அப்போதே சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினிகாந்த் ஆகியோரிடம் நெல்சன் ஜெயிலர் கதையை சொல்ல அனைவருக்கும் அது பிடித்துவிட்டது. அது விக்ரம் படம் வெளியாவதற்கு 6 மாதங்கள் முன்பே நடந்துள்ளது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜை சந்தித்த நெல்சன் தனது கதையை லோகேஷிடமும் சொல்லியுள்ளார்.

விக்ரமும் இதே போன்ற ஒரு தொடக்கத்தை கொண்டிருந்தாலும் இரண்டுமே வேறு வேறு மாதிரியான கதைகள் என்று இருவருமே பேசிக் கொண்டதாக நெல்சன் கூறியுள்ளார். இதனால் விக்ரம் படமே ரிலீஸாகாத போது எப்படி நெல்சன் விக்ரமை காப்பியடித்து ஒரு படம் செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்த இளம் இயக்குனர்கள் என்பதால் கதையில் சில விஷயங்கள் ஒரே வேவ் லென்த்தில் அமைந்து விடுவது இயற்கைதான் என கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் டிவில ப்ரொக்ராம் அசிஸ்டெண்டா வேலைக்கு சேர்ந்தேன். கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 என பல ரியாலிட்டி ஷோக்களில் வேலை பார்த்தேன்.

அப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் வேலை செஞ்சிட்டு இருக்கும்போதுதான் நடிகர் சிம்பு என்னை பார்த்தார். நானும் சிம்புவும் ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க. அவர் என்னைய பாத்ததும் ஏன் இதுலயே கிடந்து கஷ்டப்படணும். நீ சினிமாவுக்கு வந்துடு என கூப்பிட்டார்” என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இப்படித்தான் ப்ரொக்ராம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்த நெல்சன் சினிமாவிற்குள் தான் நுழைய தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.