Tag Archives: Bollywood

பாலிவுட்டில் பப்லுவின் மானத்தை வாங்கிய நடிகர்.. அடுத்து நடந்த விஷயம்தான் ஹைலைட்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் பப்லு. பப்லு ஆரம்பத்தில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதனை தொடர்ந்து சின்ன சின்ன டிவி நிகழ்ச்சிகளில் கூட நடித்து வந்தார் பப்லு. இந்த நிலையில் அவருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த திரைப்படம் 1700 கோடி ரூபாய் வரை வெற்றி கொடுத்தது. இந்த நிலையில் அந்த படத்திற்கான வெற்றி விழாவில் கலந்து கொண்டார் பப்லு. அப்பொழுது அங்கு நடந்த நிகழ்வு குறித்து அவர்கள் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது ”நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது நடிகர் அனில் கபோரும் அந்த விழாவில் இருந்தார். அப்பொழுது மைக்கை வாங்கி அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது நானும் பேச வேண்டும் என்று மைக்கை அவரிடம் கேட்டேன்.

ஆனால் அவர் என்னிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதை சுற்றி இருந்த அனைவரும் பார்த்தனர் எனக்கு ஒரு மாதிரி அவமானமாக ஆகிவிட்டது உடனே அங்கிருந்து வந்த ரன்பீர்கபூர் அவரிடம் மைக்கை வாங்கி என்னிடம் கொடுத்தார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் பப்லு.

நெருக்கமான படுக்கை காட்சிக்கு தயாரான நயன்தாரா.. மீண்டும் பழைய பாணியை கையில் எடுக்கிறார் போல..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஹிந்தியில் இவர் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் நயன்தாராவிற்கு ஒரு மார்க்கெட் கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் நயன்தாரா.  இதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்சமயம் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நயன்தாரா.

பாலிவுட் சினிமா:

பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவை போல் இங்கு கிடையாது. பாலிவுட் சினிமாவில் என்னதான் கொட்டி கொட்டி நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட கவர்ச்சிக்கு இருக்கும் மதிப்பு அங்கு நடிப்புக்கு இருக்காது.

அதனால் எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி காட்டினால்தான் பாலிவுட் சினிமாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக பாலிவுட் சினிமா அதற்காகவே பழகிவிட்ட காரணத்தினால் அங்கு சென்று நடிப்பவர்களுக்கும் வேறு வழியில்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இந்தியாவில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களை வைத்து ஒரு சீரிஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

பேன் இந்தியா சீரிஸ்:

இதில் அமீர்கான் விஜய் சேதுபதி மாதிரியான பல பெறும் பிரபலங்கள் நடிக்கின்றனர். இதில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையும் இந்த சீரியஸில் நடிக்க வைக்க இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழிலும் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் நடிகை நயன்தாராவும் அதில் நடிக்க இருக்கிறார். மேலும் சமீபத்தில் அவர் நடித்த வெளியான அன்னபூரணி திரைப்படம் பாலிவுட்டில் அதிக சர்ச்சை ஏற்படுத்தியது.

nayanthara

அதை துடைக்கும் விதமாக இந்த சீரியஸில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த சீரியஸில் இவருக்கு மிகவும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா தமிழிலேயே அதிகமாக கவர்ச்சியாக நடிப்பதை விட்டுவிட்டார் இப்பொழுது பாலிவுட்டில் எப்படி நடிக்க போகிறார் என பார்க்கும் பொழுது அதற்கு நயன்தாரா ஒப்பு கொண்டு விட்டார் என்று கூறப்படுகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது.

வாரிசு நடிகருக்கு ஜோடியாக மடக்கி தட்டு கதாநாயகி… யோகம்தான்!..

தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமை மற்றும் நடன திறமையின் காரணமாக தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீ லீலா.

உடம்பை பாம்பு போல வளைத்து நெளித்து ஆட கூடியவர் நடிகை ஸ்ரீ லலிதா என்பதால் அவருடன் நடிக்கும் நடிகர்களாலேயே அவருக்கு இணையான ஒரு நடனத்தை ஆட முடியாது என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் அவர் ஆடியிருந்த பாடல்கள் எல்லாமே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இதனை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கவனம் பெரும் ஒரு நடிகையாக மாறியிருக்கிறார் ஸ்ரீ லீலா.

ஸ்ரீ லீலா பாலிவுட் எண்ட்ரி:

இந்த நிலையில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார் ஸ்ரீ லீலா என்று ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இருந்தன. இதற்கு நடுவே நடிகர் சைஃப் அலிக்கான் மகனான இப்ராஹீம் அலிக்கான் நடிக்கும் திரைப்படத்திலும் ஸ்ரீ லீலா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்சமயம் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் தங்களுக்கு அடுத்த தலைமுறை வாரிசுகளை களம் இறங்குவதற்கு ஸ்ரீலிலாவை முக்கியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு பஞ்சமே கிடையாது என்பதால் ஸ்ரீ லீலாவின் நிலை அங்கு எப்படி இருக்கும் என்பது இன்னும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது.

சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு வந்த திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

அதிலும் அவர் நடித்த உதயம் என் ஹெச் 4, எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. தற்சமயம் சித்தா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். சித்தார்த் பாலிவுட்டிற்கும் சென்று சில படங்களில் நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கு தே பசந்தி என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அமீர்க்கானுக்கு நண்பனாக நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் அமீர் கான்  கழுத்தில் சித்தார்த் உதைப்பது போன்ற காட்சி இருந்ததாம். உடனே சித்தார்த்தும் அப்படியே செய்துள்ளார்.

ஆனால் அவர் அதை அமீர் கானிடம் சொல்லவே இல்லை. திடீரென சித்தார்த் உதைக்கவும் ஷாக் ஆகியுள்ளார் அமீர்கான். அதன் பிறகு மற்றொரு காட்சியில் உயரமான கட்டிடம் மேல் சித்தார்த் நிற்கும் காட்சி இருக்கும். அதில் சித்தார்த் நின்று கொண்டிருந்தப்போது அவரை தள்ளி விடுவது போல செய்து சித்தார்த்தை பயம் காட்டியுள்ளார் அமீர் கான்.

இந்த நிகழ்வை சித்தார்த் தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இந்திய ராக்கெட் விஞ்ஞானிகள் குறித்து தமிழில் ஒரு சீரிஸ்-  அப்துல்கலாமும் இருக்கார்..!

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பொருளாதார ரீதியாகவும் ,சட்ட ரீதியாகவும் இந்தியாவிற்கு பெரும் பிரச்சனைகள் இருந்தன. அப்போது இருந்த விஞ்ஞானிகள், தலைவர்கள் அனைவருமே இந்தியாவை தூக்கி நிறுத்துவதற்கு மிகவும் பாடுப்பட்டுள்ளனர்.

அதனால்தான் அவர்களை நாம் தேச தலைவர்கள் என அழைக்கிறோம். பெரும்பாலும் தேச தலைவர்கள் குறித்து திரைப்படங்கள் வந்தாலும் அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை.

ஆனால் தற்சமயம் சோனி லிவ்வில் வெளியான ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் விறுவிறுப்பான சீரிஸாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய்.

இவர்கள் இருவருக்கு பிறகு மூன்றாவதாக அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவில் வாண்வெளி ஆராய்ச்சிக்கு இவர்கள் செய்த முயற்சியை கூறும் சீரிஸாக ராக்கெட் பாய்ஸ் உள்ளது.

இரண்டு சீசன்களாக வந்துள்ளது ராக்கெட் பாய்ஸ் சீரிஸ். இதில் முதல் சீசனில் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுவது வரை சீசன் தொடர்கிறது. அதற்கு பிறகு இரண்டாவது சீசனில் இந்தியாவின் முதல் அணுக்குண்டு தயாரிப்பு வரை கதை செல்கிறது.

இந்தியாவின் முதல் அணுக்குண்டு கண்டுப்பிடிப்பு பயணமானது மிகவும் சுவாரஸ்யமான பயணமாகும். ஏனெனில் இந்தியா அணுக்குண்டு தயாரிக்க கூடாது என பல சதி வேலைகளை அப்போது அமெரிக்கா செய்து வந்தது. அதையெல்லாம் தாண்டி ஹோமி பாபா எடுக்கும் முயற்சிகள் பார்ப்பதற்கு ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் போலவே உள்ளது.

எனவே இந்திய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய கதையாக ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் உள்ளது.

ட்ரெஸ் பண்ணாம வந்தேன்.. போட்டோ எடுத்துட்டாங்க! – கேஷுவலாய் சொன்ன பிரபல நடிகை!

பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகையாகவும், இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வருபவர் உர்பி ஜாவெத். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

Uorfi Javed

சமீபமாக சில படங்களிலும் நடித்து வரும் உர்பி ஜாவெத் படுகவர்ச்சியான ஆடைகளால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் பதான் படத்தில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடை அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து உர்பி ஜாவெத் காவி நிற கவர்ச்சி உடையில் இருந்த போட்டோக்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் உர்பி ஜாவெத் பொது இடங்களிலேயே அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடந்து கொள்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அனுப்பிய சம்மனின் பேரில் உர்பி ஜாவெத் நேரில் ஆஜராகியுள்ளார். அப்போது விளக்கமளித்த அவர் “இந்திய பிரஜையாக எந்த ஆடையும் அணிய எனக்கு சுதந்திரம் உள்ளது. நான் படப்பிடிப்பு தளங்கள், ஸ்டுடியோவில்தான் கவர்ச்சி படப்பிடிப்புகளை நடத்துகிறேன்.

எனக்கு ஆடை மாற்ற நேரம் இல்லாததால் சில சமயம் அப்படியே வெளியே காரில் ஏற செல்வதுண்டு. அப்போது சிலர் என்னை படம் பிடித்துவிட்டனர். அதற்கு என்ன செய்ய முடியும்?” என கேஷுவலாக கேட்டுள்ளாராம்.

உத்து பார்த்தா கிர்ருன்னு இருக்கு – வெட்கபடாம காட்டும் சூர்யா பட நடிகை

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை திஷா பதானி. இவர் பாலிவுட்டில் நடித்த எம்.எஸ் தோனி என்கிற திரைப்படம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

அந்த திரைப்படம் மூலமாக இவரும் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

தோனி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு பிறகு பாகி 2, ராதே, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் ப்ரோஜக்ட் கே, போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிறுத்தை சிவா இயக்கி சூர்யா நடிக்கும் சூர்யாவின் 42வது திரைப்படத்தில் திஷா பதானி நடிக்கிறார்.

மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் ஜான்வி கபூர்

ஹிந்தி கதாநாயகிகள் முக்கியமான நடிகையாக ஜான்வி கபூர். மேலும் தமிழ் மக்களிலும் பலரும் அறிந்த் நடிகையாக இவர் உள்ளார். ஏனெனில் இவர் தமிழ் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஆவார்.

ஹிந்தியில் இவர் குஞ்சன் சக்சேனா, ரூஹி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து படம் நடித்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர்.

தற்சமயம் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் கூடிய சீக்கிரத்தில் கோலிவுட்டிலும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவில் இருந்து ஒருவர் பாலிவுட் சினிமாவிற்கு சென்றால் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் தொடர்ந்து பான் இந்தியா படங்களை வெளியிட்டு 1000 கோடிகள் ஹிட் அடித்து வருவதால் பாலிவுட்டை விடவும் வளர்ந்து வரும் சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது.

அடிக்கடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மாடர்ன் உடையில் போட்டோக்கள் வெளியிடுவது ஜான்வி கபூருக்கு வழக்கமாகும். தற்சமயம் மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காசுக்காக என்ன வேணாலும் செய்யலாமா? – அலியா பட்டை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

இந்தி சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக இருந்து வருபவர் ஆல்யா பட்.

இந்தியில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர், 2 ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலமாக தென்னிந்தியா சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

நீண்ட காலமாக ரன்பீர் கபூரை காதலித்து வந்த அலியா பட் சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்கள் பலவற்றிலும் அலியா பட் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் “சர்க்கரை உடலுக்கு நல்லது” என்று கூறி நடித்துள்ளார். ஆனால் இவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் தான் சர்க்கரை எடுத்துக் கொள்வதே இல்லை என்றும், அது உடலுக்கு கேடு என்றும் பேசியுள்ளார்.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள ரசிகர்கள் “காசு குடுத்துட்டா மனசாட்சியே இல்லாம நடிப்பீங்களா?” என்று சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.