ட்ரெஸ் பண்ணாம வந்தேன்.. போட்டோ எடுத்துட்டாங்க! – கேஷுவலாய் சொன்ன பிரபல நடிகை!

பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகையாகவும், இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வருபவர் உர்பி ஜாவெத். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

Uorfi Javed

சமீபமாக சில படங்களிலும் நடித்து வரும் உர்பி ஜாவெத் படுகவர்ச்சியான ஆடைகளால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் பதான் படத்தில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடை அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து உர்பி ஜாவெத் காவி நிற கவர்ச்சி உடையில் இருந்த போட்டோக்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் உர்பி ஜாவெத் பொது இடங்களிலேயே அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடந்து கொள்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அனுப்பிய சம்மனின் பேரில் உர்பி ஜாவெத் நேரில் ஆஜராகியுள்ளார். அப்போது விளக்கமளித்த அவர் “இந்திய பிரஜையாக எந்த ஆடையும் அணிய எனக்கு சுதந்திரம் உள்ளது. நான் படப்பிடிப்பு தளங்கள், ஸ்டுடியோவில்தான் கவர்ச்சி படப்பிடிப்புகளை நடத்துகிறேன்.

எனக்கு ஆடை மாற்ற நேரம் இல்லாததால் சில சமயம் அப்படியே வெளியே காரில் ஏற செல்வதுண்டு. அப்போது சிலர் என்னை படம் பிடித்துவிட்டனர். அதற்கு என்ன செய்ய முடியும்?” என கேஷுவலாக கேட்டுள்ளாராம்.

Refresh