Tag Archives: str 49

போதும் சாமி ஆளை விடு.. சிம்பு படத்தில் இருந்து விலகிய சந்தானம்..

சிம்பு அடுத்து தனது 49 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வந்தது.

ஏனெனில் இந்த திரைப்படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் சந்தானம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

எனவே இந்த திரைப்படம் ஒரு நல்ல வெற்றி படமாக வரும் என்று சிம்பு ரசிகர்களே ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சந்தானம் விலகி விட்டதாக சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

simbu

சந்தானம் தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருவதால் எந்த திரைப்படத்திலும் அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை. ஆனால் சிம்பு தனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதால் சிம்பு படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

இருந்தாலும் சிம்புவின் படத்தில் சந்தானம் நிறைய காட்சிகளை மாற்றியமைத்ததாகவும் அதனால் அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

தமிழ் சினிமால இந்த மாற்றத்துக்கு சந்தானம் தேவை..! சரியான பாயிண்டை வைத்த சிம்பு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தற்சமயம் திரைப்படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதனால் கதை தேர்ந்தெடுப்பதிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழில் வெற்றி வாகை சூடி வரும் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த நிலையில் தற்சமயம் சிம்பு டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.

அதில் அவர் பேசும்போது எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்திற்கு ஏன் சந்தானம் தேவை என்பது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது வர வர தமிழ் சினிமாவில் மிக சீரியஸான திரைப்படங்களாக வருகின்றன.

மக்களும் அந்த மாதிரியான திரைப்படங்களை அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஜாலியான திரைப்படங்களும் வர வேண்டும். இப்போதெல்லாம் அந்த மாதிரி திரைப்படங்கள் குறைந்துவிட்டன. சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி என்றொரு திரைப்படம் பார்த்தேன்.

நன்றாக இருந்தது. அந்த மாதிரியான திரைப்படங்களும் வர வேண்டும் அதனால்தான் எங்கள் படத்திற்கு சந்தானம் தேவை என கூறியுள்ளார் நடிகர் சிம்பு. இதன் மூலம் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து சிம்புவுடன் இரண்டு படங்கள்.. வந்த வேகத்திற்கு நடிகைக்கு வந்த வரவேற்பு..!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது புது முகங்களுக்கு நிறைய வரவேற்பை உண்டாக்கி கொடுத்துள்ளது. அப்படியாக தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றவராக மாறியிருக்கிறார் நடிகை கயாடு லோகர். முன்பெல்லாம் புது முகங்களாக வரும் நடிகைகள் பிரபலமடைவதற்கு நிறையவே கஷ்டப்பட வேண்டி இருந்தது.

ஆனால் டிராகன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை கயாடு லோகர். கயாடு லோகர் நடிக்கும் திரைப்படங்களுக்கும் இப்போது வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே தமிழில் இவர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்து டிராகன் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திலும் கயாடு லோகருக்கு வாய்ப்பு கிடைக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் அவரது 49 ஆவது திரைப்படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கயாடு லோகர் நடிக்க இருக்கிறார். இதனை அடுத்து எடுத்த உடனேயே சிம்புவின் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளாரே கயாடு லோகர் என திரைத்துறையில் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.