காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்! – வருத்தத்தில் திரையுலகம்!

தமிழில் பல படங்களில் காமெடியனாக தோன்றியவர் நடிகர் மயில்சாமி. கிட்டத்தட்ட பல வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் பல நகைச்சுவைகளை செய்துள்ளார்.

Social Media Bar

சன் டிவியில் இவர் நடத்திய காமெடி டைம் என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். தற்சமயம் நடிகர் மயில்சாமிக்கு 57 வயது ஆகிறது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார் மயில்சாமி.

இந்த நிலையில் இன்று அதிகாலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து குடும்பத்தினர் அவரை வேகமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காலமாகிவிட்டார் மயில்சாமி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பம் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

தற்சமயம் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நடிகர் ரமேஷ் கண்ணா, மனோ பாலா இன்னும் பிற நடிகர்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.