வேட்டி அவுந்து சுற்றிய பிரபலம்.. புத்திமதி கூறிய கமல்,ரஜினி.. அந்த ஒரு முடிவுதான் காரணம்..!
என்னதான் வாரிசு நடிகர்களாக சினிமாவிற்கு வந்தாலும் எல்லா நடிகர்களுக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து விடுவது கிடையாது.
அப்படியாக தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் மூலமாக அறிமுகமானாலும் கூட தொடர்ந்து வரவேற்பு கிடைக்காமல் காணாமல் போன நடிகராக இருப்பவர் நடிகர் சக்தி.
தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனரான வாசுவின் மகனான சக்தி தமிழ் சினிமாவிற்கு முக்கிய நடிகராக அறிமுகமானார்.
சினிமாவால் வந்த சோதனை
ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி படங்களாக அமையாத காரணத்தினால் பிறகு சில நாட்களிலேயே சினிமாவிலிருந்து விலகினார் சக்தி. அதற்குப் பிறகு அவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது.
அதில் கலந்து கொண்ட சக்தியை சக்தியை பலரும் எதிர்மறையாக பேச துவங்கினர். இதனை தொடர்ந்து பிக் பாஸில் இருந்து விலகிய சக்தி பிறகு மதுவுக்கு அடிமையாகி மிகவும் மோசமான நிலைக்கு சென்றார்.
அவரது வேட்டி அவிழ்ந்து போதையாக நிற்கும் வீடியோ எல்லாம் அதிக வைரலானது. அதற்கு பிறகு ரஜினி கமல் மாதிரியான பிரபலங்கள் கூறிய புத்திமதியை அடுத்து தற்சமயம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார் சக்தி.
சமீபத்தில் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பேட்டியில் பேசிய சக்தி இந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார்.