தமிழர்களை இழிவுப்படுத்துறதா இருந்தா நடிக்க மாட்டேன்! – ரூல்ஸ் போட்டு ஷாருக்கானுடன் நடித்த சத்யராஜ்!
தமிழ் சினிமாவில் வெகு காலமாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். கட்டப்பா மாதிரியான சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சத்யராஜ் அதை சிறப்பாக நடிக்கக்கூடியவர்.

தமிழில் மட்டுமின்றி பல மொழிகளில் சத்யராஜ் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு இவர் ஷாருக்கானுடன் நடித்து சென்னை எக்ஸ்ப்ரஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு பேட்டியில் சத்யராஜ் இந்த திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். அதில் அவர் கூறும்போது ”ஷாருக்கானுடன் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றதும் உடனே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த படத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் வசனம் இருப்பதை பார்க்க முடிந்தது.
எனவே படத்தில் கமிட் ஆகும்போதே நான் சில விதிமுறைகளை போட்டேன். தீபிகாவின் அப்பா கதாபாத்திரமான என்னை திட்டுவது போல வசனம் இருக்கலாம். ஆனால் தீபிகாவிடம் உன் ஊர் காரங்களே மோசம் என கூறுவது தமிழர்களை இழிவு செய்வது போல உள்ளது. எனவே அந்த வசனங்களை நீக்க வேண்டும்” என சத்யராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறியது போலவே வசனங்கள் நீக்கப்பட்டே அந்த படம் தயாரானது.