அழகோ அழகு அவள் பேரழகு! – ட்ரெண்டாகும் ஆண்ட்ரியாவின் வெக்கேஷன் புகைப்படங்கள்
தமிழின் முக்கியமான நடிகைகள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக ஆண்ட்ரியா இருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. ஆனால் இவருக்கு நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வமிருந்தது.

இந்த நிலையில் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆண்ட்ரியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அது முதல் ஆண்ட்ரியாவிற்கு ஒரு ரசிக வட்டாரம் உருவாக துவங்கியது. அவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தற்சமயம் அவர் நடித்து வெளியான அனல் மேலே பனித்துளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் பிசாசு 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் இந்தோனிசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் ஆண்ட்ரியா. அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
