வயசானாலும் அழகு குறையல! –  ஆண்ட்ரியாவின் நியூ லுக்!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆனால் பாடகியாக வந்த சமயத்திலேயே தனக்கு கதாநாயகியாக நடிக்க ஆசை. அதுவும் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

Social Media Bar

அதன் பிறகு ஆண்ட்ரியாவிற்கு படத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. அந்நியன் படத்தில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஆதவன் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.

முதன் முதலாக பச்சைக்கிளி முத்துசரம் என்கிற படத்தில் இவருக்கு நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் அவ்வளவாக பிரபலமாகாத காரணத்தால் இவரும் பிரபலமாகவில்லை.

அதன் பிறகு வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. இந்த படம் ஆண்ட்ரியாவை அனைவரிடமும் பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஆண்ட்ரியா.

தற்சமயம் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.