Actress
காந்த கண்ணழகி! – லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பல படங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி எப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ள நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு முதன் முதலாக இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் இவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை அடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

அந்த படத்தில் வரும் செல்ல குட்டி உன்ன காண என்ற பாடலை பலரும் கீர்த்தி சுரேஷிற்காகவே பார்த்தார்கள் என கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தொடரி, ரெமோ, சீம ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

தமிழில் பெரும் நட்சத்திரங்களான ரஜினி,விஜய்,விக்ரம், சூர்யா என பலருடனும் நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இன்னமும் தனது மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

