Actress
மாடர்ன் க்யூட் பொண்ணு – ரசிக்க வைக்கும் சந்தான பட நடிகை புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் எடுத்தவுடன் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நடிக்கும் படங்கள் மற்றும் தொடர்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கி கொள்பவர் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி.

இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை என்கிற டிவி சீரிஸில் ஒரே ஒரு எபிடோடில் மட்டும் வந்து சென்றார். அந்த சீரிஸில் அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு 2020 இல் ஜெய் நடித்து வெளிவந்த ட்ரிபில்ஸ் என்னும் சீரிஸில் மிக முக்கியமான கதாபாத்திரமாக வந்தார். ஜெய்யின் தோழியாக இருக்கும் இவரே மொத்த கதையையும் கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருந்தார்.

இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து ஆனந்தம், நவம்பர் ஸ்டோரி போன்ற தொடர்களில் நடித்தார். போன வருடம் சந்தானம் நடித்து வெளியான குலுகுலு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்சமயம் ஃபால் என்கிற டிவி சீரிஸில் நடித்துள்ளார். தற்சமயம் இவரது அழகிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

