Connect with us

ஸ்கெட்சே ஆர்.ஜே பாலாஜிக்குதானா..! நயன் தாராவை கமிட் செய்யாததன் விளைவு.. சிக்கலில் சிக்கிய ஆர்.ஜே பாலாஜி!..

nayanthara rj balaji

News

ஸ்கெட்சே ஆர்.ஜே பாலாஜிக்குதானா..! நயன் தாராவை கமிட் செய்யாததன் விளைவு.. சிக்கலில் சிக்கிய ஆர்.ஜே பாலாஜி!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் முதன் முதலாக எல்.கே.ஜி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து காமெடி கதாபாத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது.

ஆர்.ஜே பாலாஜி ஆசை:

rj-balaji1
rj-balaji1

ஹிந்தியில் பி.கே திரைப்படத்தை பார்த்த ஆர்.ஜே பாலாஜி அதே போலவே தமிழில் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என உருவாக்கிய திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் பிரபலமான ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என நயன் தாராவை அம்மனாக நடிக்க வைத்தார்.

படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்சமயம் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்காத காரணத்தால் மாசாணியம்மன் என்கிற பெயரில் இந்த படத்தை இயக்க இருந்தார்.

மூக்குத்தி அம்மன்:

நடிகை நயன்தாராவின் சம்பளம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிகை திரிஷாவை அம்மனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் இதனால் கோபமடைந்த நயன்தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும்படி கூறியிருக்கிறார்.

அதில் அவரே அம்மனாக நடிப்பதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து அவசர அவசரமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியீட்டை நிகழ்த்தியுள்ளது வேல்ஸ் நிறுவனம். படத்தின் கதை இயக்குனர் எதுவுமே முடிவாகாமல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top