சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக இப்பொழுது எல்லாம் எளிதாகவே நடிகைகள் மிக அதிகமாக பிரபலமடைந்து விடுகின்றனர். அப்படியாக பிரபலம் அடைந்து வரும் நடிகைகளில் நடிகை மீனாட்சி சௌத்ரி முக்கியமானவர் ஆவார்.
என்னதான் மீனாட்சி சௌத்ரி கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் லக்கி பாஸ்கர் திரைப்படம் தான்.
லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். அதன் மூலமாக பலரும் விரும்பும் ஒரு நடிகராக அவர் மாறி இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் மீனாட்சி சௌத்ரி.
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அவரிடம் மூவி டேட்டிங் என்று சென்றால் எந்த நடிகருடன் செல்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு வெகு நேரமாக யோசித்த மீனாட்சி சௌத்ரி சிம்பு சாருடன் செல்வேன் என்று கூறியிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
சிம்பு வரிசையாக பல படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு வேளை ஏதேனும் ஒரு திரைப்படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறாரோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.







