News
திரிஷாவுக்கு மட்டும் சட்டத்தில் தனி இடமா? அந்த தீர்ப்பால் கடுப்பான ரசிகர்கள்..!
அதிக வயதானாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து மார்க்கெட்டை பெற்று வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார்.
இளமை காலங்களில் அதிக படங்களில் நடித்தாலும் கூட அதற்கு பிறகு திரிஷாவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதற்குப் பிறகு சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து வந்தார் திரிஷா.
இப்பொழுது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார் திரிஷா. இந்த நிலையில் திரிஷா விற்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்க்கும் இடையே நடந்த சண்டை தொடர்பான வழக்கு அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
இந்த இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருக்கும் காம்பவுண்ட் சுவர் தொடர்பாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே பெருசா அந்த பக்கத்து வீட்டுக்காரருடன் சமரசமாக போய்விட்டதாகவும் அதனால் வழக்கை தள்ளுபடி செய்து கொள்வதாகவும் கூறினார்.
இதனை அடுத்து திரிஷாவிடம் நீதிமன்றம் வாங்கிய தொகையை திரும்ப தருமாறு உத்தரவை பெற்றுள்ளது. இது குறித்து பேசி வரும் நெட்டிசன் கூறும் பொழுது இதுவே சாமானிய மனிதர்களாக இருந்திருந்தால் நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்து விட்டதாக கூறி நம்மிடம் தொகையை வாங்கி இருப்பார்கள் திரிஷாவிற்கு மட்டும் தனி கரிசனம் காட்டுகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.
