குட்டை டவுசரில் குதுகலமா இருக்கு! – ஸ்லிம் லுக்கில் வரலெட்சுமி சரத்குமார் பிக்ஸ்

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தார்.

Social Media Bar

அதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக ஒரு நடிகர் பாலா படத்தில் நடித்தாலே அவரது மார்க்கெட் உயர்ந்துவிடும். அந்த வகையில் வரலெட்சுமிக்கும் தாரை தப்பட்டை முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் வரலெட்சுமி. பிறகு சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.வில்லி கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே செட் ஆனது.

எனவே அதனை தொடர்ந்து சர்கார், யசோதா போன்ற படங்களில் வில்லியாகவே நடித்தார். தற்சமயம் வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிக உடல் பருமனுடன் இருந்த வரலெட்சுமி தற்சமயம் தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.