Bigg Boss Tamil
சண்டையை மூட்டிவிட 10 பொருத்தமும் பக்காவா இருக்கு.! பிக்பாஸில் அடுத்த டாஸ்க்.!
போன வருடம் வெளியான பிக்பாஸில் இருந்து இந்த முறையில் ஒளிபரப்பாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் சில மாற்றங்களை கொண்டு இருக்கின்றன.
இதற்கு முன்பு நடந்த எந்த பிக் பாஸிலும் ஆண்களை தனியாவும் பெண்களை தனியாவும் வைத்து போட்டிகளை நடத்தியது கிடையாது. இதுவே அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
யாருமே தனிப்பட்ட போட்டியாளர்கள் என்று விளையாடுவது கிடையாது. தங்களுடைய குழுவுக்காக விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்குள் சண்டை என்பதே ஏற்படாமல் இருந்து வருகிறது. அதனால் மற்ற பிக் பாஸ் அளவிற்கு தற்சமயம் நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 8 சண்டைகள் இல்லாமல் இருக்கிறது.
பிக்பாஸ் டாஸ்க்
இதற்கு நடுவே இவர்களுக்கிடையே போட்டி பொறாமையை ஏற்படுத்தும் வகையில் தான் எப்பொழுதுமே டாஸ்க்குகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் கொடுத்திருக்கும் டாஸ்க்குகள் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றன.
இந்த டாஸ்கின்படி ஒவ்வொரு பிக் பாஸ் கதாபாத்திரமும் பிக் பாஸில் இருக்கும் மற்ற நபர்கள் போல நடித்துக் காட்ட வேண்டும் உதாரணத்திற்கு சௌந்தர்யா ஜாக்குலின் போல நடந்து கொள்கிறார். அதேபோல ஆர் ஜே ஆனந்தி சௌந்தர்யாவாக நடிக்கிறார் நடிகர் ரஞ்சித் ஜெஃப்ரியாக நடிக்கிறார்.
இப்படி நடிக்கும் பொழுது எப்படியும் அந்த கதாபாத்திரங்கள் செய்யாத ஒரு விஷயத்தை நடிப்பவர்கள் செய்வார்கள் அப்பொழுது அவர்களுக்கு சண்டைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
