Cinema History
தியேட்டர் ல முறுக்கு வித்த பிரபலம்.. பிறகு ரஜினிகாந்தையே கட்டி ஆண்ட கதை தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்று பல பதவிகளில் இருந்தவர் கலைஞானம். கலைஞானத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் ஒரு முக்கியமான பிரபலமாக இவர் இருந்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தே இவரை கண்டால் பயப்படுவார் என கூறலாம். ஏனெனில் ரஜினிகாந்த் முதன் முதலாக திரைக்கு அறிமுகமான பைரவி படத்தை தயாரித்தவர்தான் கலைஞானம்.
இவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பதை விளக்கும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வழங்கியுள்ளார். கலைஞானம் மற்ற சினிமா பிரபலங்களை போலவே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
பெயர் தெரியாத ஒரு கிராமத்தில் பிறந்தவர் கலைஞானம். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தையை இழந்துவிட்டார். இதனால் அவரது தாய் இட்லி விற்று அந்த காசில்தான் அவரை வளர்த்து வந்தனர்.
இதனால் கலைஞானத்தால் சிறுவயதில் படிக்க முடியவில்லை. ஆனால் அப்போது முதலே அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போதைய சமயங்களில் அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில விளம்பரங்களை திரை கட்டி ஒளிப்பரப்பி வந்தனர்.
சிறுவயது நினைவுகள்:
அதனை பார்த்து பூரித்து போனார் கலைஞானம். இப்படியான விஷயம் எப்படி உருவாக்கப்படுகிறது என்கிற கேள்வி அவருக்கு வந்தது. அந்த சமயம் பார்த்து ஊருக்குள் டூரிங் டாக்கிஸ் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டு படம் போடுவதற்கான நாளுக்காக காத்திருந்தார் கலைஞானம்.
இந்த நிலையில் திரையரங்கில் முதல் படமாக கிருஷ்ண லீலா என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. அதை பார்க்க கலைஞானத்திடம் காசு இல்லை. எனவே வீட்டில் அம்மா வைத்திருந்த ரெண்டனாவை திருடி சென்று படத்தை பார்த்தார். ரெண்டனா என்பது 25 பைசாவில் பாதி ஆகும்.
முறுக்கு விற்கும் வேலை:
வீட்டில் விசயம் அறிந்த தாய் ரெண்டனா இல்லாமல் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க கூடாது என கூறிவிட்டார். சிறுவனான கலைஞானம் திரையரங்கிற்கே திரும்ப சென்று திரையரங்க முதலாளியிடம் வேலை கேட்டார்.
அந்த காலத்தில் சிறுவர் தொழிலாளி தடை சட்டம் வரவில்லை. எனவே கொட்டகையில் பெண்கள் பக்கம் முறுக்கு விற்கும் வேலை கலைஞானத்திற்கு கிடைத்தது. கொட்டைகையில் ஒவ்வொரு முறை ரீல் மாற்றும்போதும் லைட் போடப்படும்.
அப்போது வந்து இவர் முறுக்கு விற்க வேண்டும். ஒரு படத்திற்கு ஐந்தில் இருந்து ஆறு முறை ரீல் மாற்றுவார்கள். இதற்கு நடுவே அனைத்து படத்தையும் கலைஞானம் இலவசமாகவே பார்த்துக்கொண்டார். அதுதான் சினிமாவின் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என கலைஞானம் தெரிவித்துள்ளார்.