News
ரஜினி படமாவே இருந்தாலும் அதை ஒத்துக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த மஞ்சு வாரியர்.!
தற்சமயம் தமிழ் மலையாளம் என்று இரண்டிலுமே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக மஞ்சு வாரியர் இருந்து வருகிறார். பெரும்பாலும் மஞ்சு வாரியார் கதைகளை தேர்ந்தெடுத்துதான் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறக்கூடியவையாக இருந்து வருகின்றன. இதனால் மஞ்சுவாரியற்கான மதிப்பும் வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
ஓப்பன் டாக் கொடுத்த மஞ்சு வாரியர்
மேலும் மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் நடிக்காமல் இருந்து விட்டு திரும்ப வந்து இப்படியான ஒரு உயரத்தை தொட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. வயதாகி விட்டாலே பொதுவாக நடிகைகளால் நடிக்க முடியாது என்று நினைத்து வந்த சினிமாவில் எந்த காலகட்டத்திலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் மஞ்சு வாரியார்.
தற்சமயம் தமிழில் ரஜினியுடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மஞ்சுவாரியர். வேட்டையன் திரைப்படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் மஞ்சுவாரியார் கூறும் பொழுது எனக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களாக இருக்க வேண்டும் நான் போய் திரையரங்கில் பார்க்க ஆசைப்பட வேண்டும் அப்படியான படங்களில் மட்டும் தான் நான் நடிப்பதற்கு கமிட் ஆவேன். இல்லை என்றால் பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
