அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து? –  குடும்ப புகைப்படத்தை அப்டேட் செய்த பிரபலங்கள்

தமிழர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இந்த பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Social Media Bar

அந்த வகையில் சினிமா பிரபலங்களும் கூட வரிசையாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவர்கள் பண்டிகை கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அருண் விஜய் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதே போல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை பார்க்க முடிகிறது.

அடுத்ததாக நடிகர் பாக்கியராஜ் அவரது குடும்பத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது குடும்பத்தில் அதிகமான நபர்களை பார்க்க முடிகிறது.

நடிகர் சிம்பு தனது பங்குக்கு ஒரு வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார், மேலும் நடிகை ராஷ்மிகா, அனுபாமா போன்றோரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.