News
உன்ன யாரு அவுத்து போட்டு? நடிகை ஷகிலா குறித்து சர்ச்சை கேள்வி எழுப்பிய பிரபலம்.!
பிரபலங்கள் பலரும் youtube சேனல் வைத்து அதன் மூலமாக பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷகிலாவும் தனக்கென தனிப்பட்ட யூ டியூப் சேனலை வைத்திருக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஷகிலா. அதன் மூலமாக அவர் இன்னும் அதிக பிரபலமடைந்தார்.
அதில் ஒரு முறை பேசிய ஷகிலா கூறும் பொழுது சினிமா வட்டாரத்தில் தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பது குறித்து கூறியிருந்தார். அதில் அவர் முதல் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் தன்னை ஏமாற்றி அரை நிர்வாணமாக நடிக்க வைத்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார்.
நடிகை ஷகிலா:
அதற்குப் பிறகு நடித்த எந்த திரைப்படத்திலும் அப்படி நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசி இருந்த பிரபலம் காந்தா ராஜ் கூறும்பொழுது உங்கள் அனுமதி இல்லாமல் தான் உங்களை அப்படி நடிக்க வைத்தார்களா?

அப்படி என்றால் ஏன் எல்லா பெண்களிடமும் அப்படி நடிக்குமாறு கூறவில்லை நீங்கள் அதற்கு ஒப்பு கொண்டதால் தான் அவர்கள் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது செய்த தவறை மறைப்பதற்காக இப்படி எல்லாம் பொய் கூறுகிறார்கள் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் காந்தராஜ்.
