Cinema History
அந்த நாட்டு படங்களை பார்த்துதான் ஆறுதல் அடைஞ்சுக்குறேன்!.. கமல்ஹாசன், பா.ரஞ்சித், மிஸ்கின் மூவரும் பாராட்டிய திரைப்படம்!.
இந்தியாவிலேயே ஹிந்திக்கு பிறகு அதிக படங்களை கொடுக்கும் சினிமாவாக தமிழ் சினிமா உள்ளது. தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் திரைப்படங்களாக இருக்கின்றன.
1000 கோடி வசூல் சாதனை என்பது தென்னிந்தியாவில் சகஜமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது. இருந்தாலும் உலக சினிமாவோடு இந்திய சினிமாவை ஒப்பீடு செய்யும் பொழுது அதில் ஒரு சில திரைப்படங்களே இந்தியாவில் உலக சினிமா தரத்திற்கு எடுக்கப்படுகிறது.
தமிழில் கடைசி விவசாயி போன்ற ஒரு சில படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் தமிழில் இப்படி சினிமா வராத போதும் தமிழ் பிரபலங்கள் பலர் ஒரு உலக சினிமாவை கண்டு பெரிதாக வியந்துள்ளனர். இதை அவர்கள் தங்கள் பேட்டிகளில் கூறியுள்ளனர்.
கமல்ஹாசன் ஒரு முறை பேட்டியில் கூறும் பொழுது தமிழ்நாட்டில் நல்ல சினிமா வரவில்லை என்றாலும் கூட ஈரானில் நல்ல சினிமா வருகிறது அடிமைத்தனம் அதிகமாக உள்ள அந்த நாட்டில் இருந்து நல்ல சினிமா வருவது ஒரு பெரிய விஷயம்தான் என்று கூறியிருக்கிறார்.
அடுத்து மிஸ்கினும் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஈரானில் வெளியான சில்ரன் ஆஃப் ஹெவன் என்கிற திரைப்படம் தனது மனதை வெகுவாக பாதித்த திரைப்படம் என்று கூறியிருக்கிறார். அதே போல பா.ரஞ்சித்தும் ஒரு பேட்டியில் பேசும்பொழுது சில்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் அரசியல் ரீதியாக கொடுத்த பாதிப்பு நான் அந்த மாதிரியான திரைப்படங்களை எடுக்க காரணமாக அமைந்தன என்று கூறி இருக்கிறார். இப்படி பலரும் போற்றும் திரைப்படமாக அந்த ஒரு திரைப்படம் இருந்திருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்