Connect with us

புராண கதைகளை மறைமுகமாக கொண்டு தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்!.

tamil cinema

Special Articles

புராண கதைகளை மறைமுகமாக கொண்டு தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்!.

தளபதி –  மகாபாரத கதை

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் தளபதி. இந்த படத்தை பொருத்தவரை அநாதையாக ஒரு வீட்டில் வளரும் ரஜினிக்கும் மம்முட்டிக்கும் இடையே நட்பு ஏற்படும்.

அதனை தொடர்ந்து மம்முட்டி வழியை பின்பற்றி அவருடன் ரவுடிசம் செய்து வருவார் ரஜினி. பிறகு அங்கு கலெக்டராக வரும் அரவிந்த் சாமி அவரை அடக்கி ஒடுக்குவார்.

அதே போல மகாபாரதத்தில் தாயால் கை விடப்பட்ட கர்ணனுக்கு துரியோதனன் அடைக்கலம் கொடுப்பார். இதனால் மகாபாரத போரில் துரியோதனன் பக்கம் நிற்பார் கர்ணன். அதில் வரும் அர்ச்சுனன் கதாபாத்திரமாக படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் இருக்கும்.

ராவணன் –  ராமாயண கதை


தனது தங்கையை அவமானப்படுத்தியதற்காக ராமனின் மனைவியை ராவணன் கடத்துவதுதான் ராமாயணத்தின் மைய கருவாக இருக்கும். அதனை தொடர்ந்து பெரும் படையை திரட்டி ராமன் ராவணனுக்கு எதிரான போரை நிகழ்த்துவார்.

அதே போல மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் கதையும் இருக்கும். படத்தின் கதைப்படி விக்ரமின் தங்கையான ப்ரியாமணியை கெடுத்து கொன்றுவிடுவார்கள். அதனால் கோபமடைந்த விக்ரம் பெரும் போலீஸ் அதிகாரியான பிரித்திவிராஜின் மனைவியை கடத்துவார்.

ராமன் பெரும்படையை கொண்டு போர் தொடுப்பது போல பிரித்திவிராஜும் தனக்கென தனி படையை உருவாக்கி போரை துவங்குவார்.

ராயன் – ராமாயண கதை

ராவணன் திரைப்படம் போலவே ராயன் திரைப்படத்திலும் ராவணன் கதையைதான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். சிறு வயதிலேயே தந்தையால் கை விடப்பட்ட ராவணன் தனது தம்பி தங்கை அம்மா அனைவரையும் அவர்தான் கஷ்டப்பட்டு வளர்த்தெடுப்பார்.

வளர்ந்த பிறகு குபேந்திரனிடம் இருந்து தனது ஆட்சியை பிடிப்பார். அதே போல ராயன் படத்தின் கதை அம்சமும் இருக்கும். ராவணின் தங்கை சூப்பனகை மீது லெட்சுமணன் கை வைத்தப்பிறகுதான் ராமாயணத்தில் பிரச்சனை வரும்.

அதே போல இதிலும் தனுஷின் தங்கை மீது கை வைத்த பிறகு எஸ்.ஜே சூர்யாவின் தம்பி மாதிரி இருக்கும் அந்த கதாபாத்திரத்தை தனுஷ் பழி வாங்குவார். ராவணனின் தம்பியான விபிஷுணன் ராவணனை எதிர்த்து ராமர் பக்கம் நின்று சண்டையிடுவார். அதை பின்பற்றி இந்த படத்திலையும் தம்பி கதாபாத்திரம் தனுஷிற்கு எதிரானதாக இருப்பதாக காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் ராமாயண கதையில் இரண்டாம் தம்பி கும்பகர்ணன் ராவணனுக்கு ஆதரவாகதான் இருப்பார். ஆனால் இந்த கதையில் இரண்டு தம்பிகளுமே எதிரிகளாக இருப்பார்கள்.

காலா – ராமாயண கதை

ராமாயண கதைக்கும் காலா படத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. காலம் காலமாக வட இந்தியர்களால் தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து அந்த இடத்தை பிடிக்கவே முடியவில்லை. எனவே கதைகளின் வழியாகவாவது அந்த இடத்தை ஆண்டதாக இருக்க வேண்டும் என்றுதான் ராமாயணத்தில் ராவணனை தென்னிந்திய மன்னனாக உருவாக்கினர்.

ஒருவேளை ராவணன் தன்னுடைய நிலத்திற்குள் ராமரை வரவே விடாமல் தடுத்திருந்தால் எப்படி இருக்கும். அசுரன் என்பது ராமரின் கூட்டத்தாருக்கு அருவருப்பான விஷயமாக இருந்தாலும் அது ராவணனின் கூட்டத்தாருக்கு அதுதான் வாழ்க்கையாக இருக்கும். அதை வைத்துதான் காலாவில் ரஜினி கருப்பு உடையே அணிந்திருப்பார். தூய்மை, வெண்மை என ராமரின் அடையாளமாக வில்லன் கதாபாத்திரம் இருக்கும்.

சலார் – மகாபாரத கதை:

ராமாயண கதையை பொறுத்தவரை அதில் கௌரவர்கள் படையில் மிக சிறந்த வீரர்களாக துரியோதனன், கர்ணன், துரோணாச்சாரியார் மூவரும் இருப்பார்கள். பாண்டவர்களால் அவர்கள் மூவரையுமே நேருக்கு நேர் கொல்ல முடியாது.

எனவே வஞ்சனையாக குறுக்கு வழியில்தான் அவர்கள் மூவரையும் கொல்வார்கள். மகாபாரத போரில் பாண்டவர்கள் அழிய முக்கிய காரணமே துரியோதனன் கர்ணனின் நட்புதான். இந்த நிலையில் ஒருவேளை துரியோதனனும் கர்ணனும் எதிரி ஆகியிருந்தால் எப்படி இருக்கும்.

அவர்களுக்குள் ராஜிய தகராறு வந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் சலார் திரைப்படம். இதில் துரியோதனன் கதாபாத்திரமாக பிரித்திவிராஜும் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸும் நடித்திருப்பர்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top