News
உலகத்துலயே அந்த விஷயம் டி.எம் சவுந்தர் ராஜனால்தான் செய்ய முடியும்… வித்தை தெரிஞ்ச மனுஷன் போல!..
தமிழ் சினிமாவில் தங்களது தனிப்பட்ட திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல கலைஞர்கள் உண்டு. அதில் பாடகர்களுக்கு முக்கியமான இடம் உண்டு. பாடகர்கள் சிறப்பான குரல் வளத்தை கொண்டு வெளிப்படுத்தும் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் பொழுது யார் அதை பாடியது என்று மக்களே அதை தேடத் தொடங்குகிறார்கள்.
எஸ்.பி.பி மாதிரியான பாடகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதும் இதனால் தான். எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் எம்.ஜி.ஆருக்கு அதிகமாக பாடல்கள் பாடிய மிக முக்கியமான பாடகராக டி எம் சௌந்தரராஜன் இருந்தார் டி.எம் சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி பல நடிகர்களுக்கும் பாடியுள்ளா,ர் ஆனால் எம்ஜிஆருக்குதான் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த மனிதன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகனாக சிவகுமார் நடித்திருப்பார். இதில் அனைத்து பாடல்களையுமே டி எம் சௌந்தரராஜன்தான் பாடியிருந்தார்.
அதில் அவர் பாடும் பொழுது இளமையான சிவாஜிக்கு ஒரு வகையில் பாடி இருந்தார். முதுமை அடைந்த சிவாஜிக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்கிற பாடலை அதற்கு தகுந்தார் போல பாடியிருந்தா.ர் அதன் பிறகு சிவக்குமாருக்கும் ஒரு பாடல் அந்த படத்தில் இருந்தது.

அந்தப் பாடலையும் கூட டி எம் சௌந்தரராஜன் பாட வேண்டி இருந்தது. டி எம் சௌந்தரராஜன் அந்த பாடல் சிவாஜி பாடும் பாடல் என நினைத்து மாற்றி அந்த பாடலை பாடியிருந்தார். அதன் பிறகு அவரை அழைத்த ஏ.வி.எம் ”இந்த பாடல் ஒரு சின்ன பையன் பாடும் பாடல், சிவகுமார் என்று ஒருவன் சினிமாவில் வந்துள்ளான்” எனக் கூறி சிவகுமாரை காட்டியுள்ளார்.
சிவகுமாரின் பேச்சு வழக்குகளை பார்த்த டி.எம்.எஸ் அதன்பிறகு அதற்கு ஏற்றார் போல குரல் வளத்தை மாற்றி என் கேள்விக்கென்ன பதில் என்கிற அந்த பாடலை பாடி கொடுத்துள்ளார்.
