News
காணாமல் போன கானமயில்.. தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து.!
உலகைப் பொறுத்தவரை மனிதனுக்கு முன்பிருந்தே இங்கு ஏகப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் விலங்குகளுக்கு முன்பிருந்தே பறவைகள் இருந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த பூமி கிட்டத்தட்ட 400 கோடி வருடங்களாக இருந்து வருகிறது. அதில் மூன்று லட்சம் வருடங்களாகதான் மனிதர்கள் இருந்து வருகிறோம். நமக்கு முன்பே இருந்த பல கோடி வருடங்களாக இங்கு மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளன.
ஆனால் மனிதர்கள் வந்த பிறகு நிறைய இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. அப்படியாக தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அதிகமாக பரவலாக இருந்து வந்த கான மயில் என்கிற பறவை இனம் தற்சமயம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது.
அழிந்து வரும் இனம்:
கானமயில் பறவை குறித்து தமிழ் செய்யுளில் கூட இருக்கிறது. அவ்வையார் கானமயில் குறித்து ஒரு பாடல் பாடி இருக்கிறார் இப்படி இருக்கும் பொழுது கான மயிலை கடந்த 30 வருடங்களாக யாருமே கண்ணால் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அவை வாழ்ந்து வரலாம் என்று ஒரு கணிப்பு இருக்கிறது அப்படி பார்த்தால் கூட மொத்தமாக ஒரு 30 கான மயில் வாழ்ந்து வந்தாலே பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது. வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்த கால கட்டத்தில் கான மயிலை சில இடங்களில் பார்த்ததாக பதிவு செய்திருக்கின்றனர்.
அதற்குப் பிறகு 30 வருடங்களாக கான மயில் யார் கண்ணிலும் படவில்லை இது தமிழகத்தின் இயற்கை சூழியல் மாற்றத்திலேயே பிரச்சனை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 லட்சம் பறவை இனங்கள் இதுவரை அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும் இந்த விஷயத்தை தமிழில் பிரபல எழுத்தாளரான எஸ் ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
