தளபதி 67 ரிலீஸ் தேதி எப்போ? – இப்போதே முடிவு செய்த படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி வருகிறது தளபதி 67. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Social Media Bar

நேற்றில் இருந்து இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற பட்டியல் வெளிவந்து கொண்டுள்ளது. த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் இன்னும் பலரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகும் என செய்திகள் பரவி வந்தன. ஆனால் தீபாவளிக்குதான் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

விஜய் படமும் ரஜினி படமும் தீபாவளி அன்று சண்டை போட்டுக்கொள்ள போகிறது என ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் தளபதி 67 படத்தை துவங்கும்போதே அதை இந்த வருடம் ஆயுத பூஜைக்கு வெளியிடவே லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடம் அக்டோபர் 23 இல் ஆயுத பூஜை வருகிறது. மூன்று மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். எனவே மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு 7 மாதங்கள் உள்ளன. அதற்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து ஆயுத பூஜைக்கு வெளியிட முடியும் என கூறப்படுகிறது.

எனவே ரசிகர்களும் படத்தை அக்டோபர் 23,2023 இல் எதிர்பார்க்கலாம் என ஆவலோடு உள்ளனர்.