Connect with us

பிரதமரின் முதலைக்குட்டி கதையை விட இது சுவாரஸ்யமா இருக்கே!.. தம்பி ராமய்யா மயில் வளர்த்த கதை!.. சட்ட விரோத செயலாச்சே!..

thambi ramaiah 1

Cinema History

பிரதமரின் முதலைக்குட்டி கதையை விட இது சுவாரஸ்யமா இருக்கே!.. தம்பி ராமய்யா மயில் வளர்த்த கதை!.. சட்ட விரோத செயலாச்சே!..

Social Media Bar

Thambi Ramaiya: தமிழ் சினிமாவில் உள்ள குணச்சித்திர நடிகர்களில் முக்கியமான நடிகர் தம்பி ராமையா பொதுவாக கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கூட ஒரே மாதிரியாக நினைத்தாலே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் குணச்சித்திர நடிகர்களை பொருத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு இயக்குனராக இருந்தாலும் கூட ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக தம்பி ராமையா இருந்து வருகிறார்.

தம்பி ராமையாவின் பால்ய கால வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு காட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கையோடு வாழ்ந்தவர்தான் தம்பி ராமையா. ஒருமுறை அவர் ஈச்சம்பழம் பறிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற பொழுது அங்கு அவருக்கு 5 முட்டைகள் கிடைத்துள்ளன.

அவை பார்ப்பதற்கு கோழி முட்டையை விட சற்று பெரிதாக இருந்திருக்கின்றன. சரி அவற்றை கோழி முட்டையோடு சேர்த்து அடை வைத்து என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்று அடை வைத்திருக்கிறார்.

அந்த முட்டைகள் கோழி முட்டையை விட பொறிப்பதற்கு அதிக காலங்களை எடுத்துள்ளன. கிட்டத்தட்ட 40 நாட்கள் வரை அந்த முட்டை பொரியாமல் இருக்கவும் அவை கூமுட்டைகளாக போய்விட்டதோ என்று யோசித்து இருக்கிறார் தம்பி ராமையா.

ஆனால் பொரிந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது அந்த ஐந்தும் மயில் முட்டைகள். அதிலிருந்து மயில் குஞ்சுகள் வந்திருக்கின்றன பிறகு அவற்றில் மூன்று மயில் குஞ்சுகளை தம்பி ராமய்யா வளர்க்க துவங்கியிருக்கிறார் இதனால் அவரிடம் 3 மயில்கள் இருந்திருக்கின்றன.

அந்த சமயத்தில் வீட்டில் மயில் வளர்ப்பது சட்டவிரோதமான செயலாக இல்லாத காரணத்தினால் அவர் மயில் வளர்த்துள்ளார்.

To Top