Connect with us

ஒரே வார்த்தையில் ஹீரோவை கலாய்த்துவிட்ட அமீர்!.. ஒருவேளை சூர்யாவாக இருக்குமோ!.

ameer

News

ஒரே வார்த்தையில் ஹீரோவை கலாய்த்துவிட்ட அமீர்!.. ஒருவேளை சூர்யாவாக இருக்குமோ!.

Social Media Bar

Tamil Director Ameer : தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் மௌனம் பேசியதே. திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை அமீர் கொடுத்திருக்கிறார் அவற்றில் ராம், பருத்திவீரன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. இயக்குனராக இருந்ததை விடவும் ஒரு நடிகராக அமீருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

வடசென்னையில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து இயக்குனர் அமீர் படங்களில் நடிக்க தொடங்கினார் தற்சமயம் மாயவலை என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அமீர்.

இந்த திரைப்படம் சீக்கிரத்தில் திரையில் வரவேற்கிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது தனது முதல் பட அனுபவத்தை பகிர்ந்திருந்தார் முதலாக படம் எடுக்கும் பொழுது இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையே பெரிதாக இல்லாமல் தான் படம் எடுத்து இருக்கிறார்.

அப்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் பொழுது மிகவும் பயத்துடனே அங்கு சென்று பேசியுள்ளார். ஏனெனில் அதற்கு முன்பு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது இல்லை. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் ஹீரோவுக்காக கதையை எழுதுவீர்களா அல்லது கதையை எழுதி விட்டு ஹீரோவை தேடுவீர்களா என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த அமீர் நான் கதையை எழுதிவிட்டு தான் கதாநாயகனை தேடுவேன். அது எப்படி ஒரு கதாநாயகனுக்காக கதை எழுத முடியும் என்று கூறிவிட்டார். இதனால் கடுப்பான அந்த படத்தின் கதாநாயகன் அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டாராம். ஆனால் அது யார் என்று அமீர் கூறாவிட்டாலும் அவரது முதல் படம் மௌனம் பேசியதே திரைப்படம்தான் என்பதால் அது சூரியாவாகதான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

To Top