News
கடைசி நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிட்டு!.. கில்லி படத்தில் நடிகரை தூக்கிய இயக்குனர்!.. விஜய்தான் காரணமா?
விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் கில்லி. இப்போது இருப்பது போல அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் கில்லி திரைப்படம் முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
வெளியான அனைத்து மொழிகளிலுமே வெற்றியை கொடுத்த திரைப்படமாக கில்லி திரைப்படம் இருந்தது. ஆனால் தமிழில் இயக்குனர் தரணி படத்திற்கு தகுந்தாற் போல பல மாற்றங்களை செய்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்கிற திரைப்படத்தின் ரீமேக்காகதான் தமிழில் எடுக்கப்பட்டது.
ஒக்கடு திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒக்கடுவை விட கில்லிதான் சிறப்பாக இருப்பதாக மகேஷ் பாபுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கில்லி தெலுங்கு வெர்ஷனில் மகேஷ் பாபுவிற்கு தம்பி இருப்பதாகதான் கதை இருந்தது.

எனவே இயக்குனர் தரணியும் அழகி திரைப்படத்தில் வாலிப பார்த்திபனாக நடித்த சதீஸ் ஸ்டீபனை இதற்காக தேர்ந்தெடுத்தார். இதனை அடுத்து சதிஷிற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் நடந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய்க்கு தம்பிக்கு பதிலாக தங்கை கதாபாத்திரத்தை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
சிறு வயதில் விஜய்க்கு ஒரு தங்கை இருந்து சிறு வயதிலேயே அவர் காலமானது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த தங்கச்சி செண்டிமெண்டில் விஜய்தான் தம்பிக்கு பதிலாக தங்கை கதாபாத்திரமாக மாற்றினார் என்று கூறப்படுகிறது.
