Connect with us

14 மாதம் என்னை சித்ரவதை செய்தனர்! தயாரிப்பாளர் குறித்து அதிர்ச்சி தகவல் அளித்த பிரபல நடிகை.

News

14 மாதம் என்னை சித்ரவதை செய்தனர்! தயாரிப்பாளர் குறித்து அதிர்ச்சி தகவல் அளித்த பிரபல நடிகை.

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகையான பிளோரா சைனி, இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் திண்டுக்கல் சாரதி, கஜேந்திரா போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சினிமாவில் இருந்தபோதே தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் இருந்துள்ளார்.

அந்த தயாரிப்பாளர் யார் என கூறவில்லை. ஆனால் அந்த தயாரிப்பாளர் ப்ளோரா சைனியை கொடுமைப்படுத்தியுள்ளார். அவரது மொபைலை பிடுங்கி கொண்டாராம். தினமும் அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அவரது கொடுமை தாங்காத நடிகை 14 மாதங்கள் கழித்து எப்படியோ தப்பித்து அவரது குடும்பத்தாரை வந்தடைந்தார்.

தயாரிப்பாளரை விட்டு வந்ததால் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என கூறியுள்ளார் ப்ளோரா சைனி.

To Top